வெட்கப்படுதல் Jeffersonville, Indiana USA 65-07-11 1. நன்றி, சகோ. நெவில். காலை வணக்கம், நண்பர்களே. இன்று காலை இங்கு வந்துள்ளது நல்லது. நான் நினைக்கிறேன்... சகோ. நெவிலின் நேரத்தில் நான் தலையிட்டுவிட்டேன். அங்கு அவர் உட்கார்ந்து கொண்டு, பிரசங்கத்தின் பொருளுக்கான கருத்துக்களை ஒன்றாக இணைத்துக் கொண்டிருந்த நேரத்தில் நான் உள்ளே நுழைந்தேன். அவர் பொருளை மூடி வைத்துவிட்டு என்னிடம் கூறினார். ''சரி..''. 2 அநேக ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒன்றை அது நினைப்பூட்டுகிறது. சகோதரி கிராஸ், சகோ. ஸ்மித் என்னும் பெயர் கொண்ட ஒரு கறுப்பு நிற சகோதரன் இரவு கூட்டத்தின் போது நுழையும் போது, அந்த வயோதிபர் இவ்வாறு கூறுவது வழக்கம். அவருக்கு வெள்ளை மீசை இருந்தது. அவரை உங்களில் யாருக்காவது ஞாபகம் உள்ளதா இல்லையாவென்று எனக்குத் தெரியவில்லை. அவர் மேடையின் மேல் இருப்பார். அப்பொழுது எல்லோரும், “பரலோகத்துக்குச் செல்லும் பெரும்பாதை இது” என்னும் பாடலை பாடிக் கொண்டிருப்பார்கள். சகோ. ஸ்மித் இப்படி உட்கார்ந்து கொண்டிருப்பார். நான் பின்பக்கத்து கதவின் வழியாக நுழைவேன். அங்கு மிகவும் கறுத்த ஒரு சிறு பெண் இருந்தாள். அவள் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டிருப்பாள். அவள் கைகொட்டி, ''அவரை உயர்த்துங்கள்“ என்னும் பாடலைப் பாடிக் கொண்டிருப்பாள் -அவர்கள் எல்லோருமே பாடிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் தங்கள் சொந்த ராகத்தில் அதைப் பாடுவார்கள். வேறு சிலர் அடுத்த மூலையிலிருந்து ”உள்ளே மறுபடியும் வாருங்கள்“ என்று பாடுவார்கள். மற்ற மூலையிலுள்ளவர்கள். ''அவரை உயர்த்துங்கள்” என்று மாறி மாறி பாடுவார்கள். நான் உள்ளே நுழையும் போது அதைத்தான் அவர்கள் பாடிக் கொண்டிருப்பார்கள். அந்தக் கூட்டத்தினரை நான் நேசிக்கிறேன். அந்த வயோதிப சகோதரன் ஸ்மித் அங்கு உட்கார்ந்து கொண்டிருப்பார். அவர் அமைதியான சுபாவம் கொண்டவர். அவர் என்னிடம், “மூப்பரே, உள்ளே வந்து உங்கள் தொப்பியை இளைப்பாறப் பண்ணுங்கள்” என்பார். “நீங்கள் இளைப்பாறுங்கள்” என்றல்ல, “உங்கள் தொப்பியை இளைப்பாறப் பண்ணுங்கள்”. அவர் எழுந்து நிற்பார். அவர் எப்படி பேச்சை தொடங்கினார் என்று நான் உங்களிடம் கூற முடியும். நான் மாட்டிக்கொண்டேன், பாருங்கள், அவர் இப்படிக் கூறுவார்: “பிள்ளைகளே, உங்களுக்குத் தெரியுமா, நான் இங்கு அமர்ந்துகொண்டு, ”ஆண்டவரே நான் பேசுவதற்கு என்ன பொருள் தரப்போகிறீர்?' என்று வியந்து கொண்டிருந்த போது, அவர் என்னை நோக்கி தலையசைத்து விட்டு, 'நீ பேசுவதற்கு நான் ஒன்றுமே உனக்கு தரப்போவதில்லை' என்று கூறிவிட்டார். அப்பொழுது மூப்பர் பிரன்ஹாம் உள்ளே நுழைவதைக் கண்டேன். உடனே நான், “ஆண்டவரே, இப்பொழுது புரிகிறது” என்றேன். “ நான் சரியாக மாட்டிக் கொண்டேன்! 3 சகோ. ஜார்ஜ் ரைட், எப்படியிருக்கிறீர்கள்? (சகோ. ரைட், “ஓ, நன்றாக இருக்கிறேன். நிச்சயமாக” என்கிறார்-ஆசி) சகோ. ரைட், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! நிச்சயமாக. (“சகோ. எலைஜா பின்னால் இருக்கிறார்”). ஓ, அப்படியா? சகோ. எலேஜ் பெர்ரி பின்னால் இருப்பதாக அவர் கூறினார். சகோ. எலேஜ், எங்கே இருக்கிறீர்கள்? நீண்ட நாட்கள் அவரை நான் காணவில்லை... ஓ, என்னே! இங்கு ஒரு நல்ல கூட்டம் நடத்த வேண்டும். எலைஜ் பெர்ரி, ஜார்ஜ் ரைட், இன்னும் மற்ற பழைய காலத்தவர். காற்று அடிக்கும் போது ஜன்னலை எங்கள் கைகளினால் பிடித்துக் கொண்ட அப்படிப்பட்ட காலத்தில் இவர்கள் கூட இருந்தனர். உங்களை கண்டதில் மகிழ்ச்சி உங்கள் தாயார் சகோதரி ரைட் உங்களுடன் இருக்கிறார்களா? அவர்களும் பின்னால் அமர்ந்திருக்கிறார்கள். ஆம், ஐயா. எவ்வளவு அருமையானது சகோதரி பெர்ரி. அவர்கள் அனைவரையும் இப்பொழுது நான் காண்கிறேன். அது உண்மையில் அருமையானது. இங்கு வந்தது நல்லது. இந்த இடங்களில் உட்காருவது நல்லது. இவ்வாறு ஒன்றாக இருப்பது நல்லது. 4 நான் திரும்பி வந்து பிறகு மிகவும் கடினமாக திட்டமிட்டேன். என் இருதயத்தில் பாரம் குடிகொண்டுள்ளது. நான் இப்பொழுது தான் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பிவந்தேன் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். அங்கு நான் சென்ற போது, கட்டுப்படுத்தப்பட்ட அனுமதிச்சீட்டு விசா, (Restricted visa) எனக்கு வழங்கப்பட்டது. அவர்கள் என்னைப் பிரசங்கம் செய்ய அனுமதிக்கவில்லை, ஏனெனில் அத்தகைய கூட்டங்களில் திரளான ஜனங்கள் ஒன்று கூடுகின்றர். அவர்கள் அரசுக்கு விரோதமான எழுச்சியை எந்நேரமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் என்னைப் பிரசங்கிக்க அனுமதிக்காததன் காரணம் என்னவெனில், அது திரளான ஜனங்களை ஒன்றுகூட்டி விடுகின்றது. நான் அங்கு பிரசங்கிக்கக் கூடிய ஒரே வழி, அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு ஸ்தாபனம் எனக்கு அழைப்பு விடுக்கவேண்டும். அப்பொழுது அரசு தானாகவே பாதுகாப்புக்காக இராணுவத்தை அனுப்பும். பாருங்கள், அவர்கள்... அங்கு ஒரு எழுச்சி வரப் போகின்றது. அவ்வளவுதான். அது மிக அருகாமையில் உள்ளது. அரசு அதிகாரி ஒருவர், ''சென்ற முறை நீங்கள் இங்கு வந்திருந்த போது, ஏறக்குறைய இரண்டரை லட்சம் பேர் ஒன்று கூடினர்'' என்றார். அவர் மேலும், “எழுச்சிக்காக கம்யூனிஸம் அப்படிப்பட்ட ஒன்றை தான் எதிர்நோக்கியுள்ளது” என்றார். எனவே என்னால் அங்கு பிரசங்கம் செய்ய முடியவில்லை. ஜனங்கள் அங்கு நின்றுகொண்டு கைகளை ஆட்டி அழுது, “என் தாயை நினைவு கூருங்கள் என் சகோதரர் மரித்துவிட்டாரே, உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?” என்றெல்லாம் கூறினர். அவர்கள் கம்பிகளுக்குப் பின்னால் இருந்தனர். அது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. நான் வீடு திரும்பினேன். 5 நான் இவ்வாறு நினைத்துக் கொண்டேன். “சரி...”. என் மகன் ஜோசப் படிப்பில் சற்று பின்னடைந்துள்ளான். அவன் பரீட்சையில் தேறிவிட்டான். எனினும் அவன் அதை மீண்டும் எழுத வேண்டியதாயுள்ளது. போதிய அளவுக்கு நன்றாக அவன் படிக்கவில்லை, எனவே நாங்கள் வீட்டில் சிறிது காலம் தங்கியிருக்க வேண்டுமென்று எண்ணினேன். ஆனால் நாங்கள் வீட்டில் தங்கினால், பிள்ளைகளின் விடுமுறையை அது பாதிக்கும். எனவே அந்த பரீட்சையை அவன் ஆகஸ்டு மாதம் எழுதலாம் என்று ஒத்திப் போட்டுவிட்டு, விடுமுறைக்காக இரண்டு மூன்று வாரங்கள் இங்கு வரலாம் என்று நினைத்து வந்தோம். நான் அங்கிருந்த போது, இங்கு வந்து கூட்டம் நடத்துவதென்று முடிவு செய்தேன். அதற்காக பள்ளி அரங்கத்தை வாடகைக்கு எடுத்து, 28ம் தேதி முதல், முதலாம் தேதி முடிய அங்கு கூட்டம் நடத்தலாம் என்று எண்ணினேன். ஏழு கலசங்கள் ஊற்றப்படுதலின் பேரில் பிரசங்கம் செய்ய வேண்டுமென்று நினைத்தேன். அதனால் தான் நாங்கள் முன் கூட்டியே வந்தோம். ஆனால் எங்களுக்கு சிறிது ஏமாற்றம் ஏற்பட்டது. அவர்கள் இனிமேல் நமக்கு அந்த பள்ளி அரங்கத்தை தரமாட்டார்களாம். அங்கு அதிக ஜனக்கூட்டம் வருகின்றதாம். நாம் கூட்டத்தை வேறெந்த இடத்திலும் வைக்கமுடியாது. எனவே நான் தீர்மானித்தேன். நான் இங்கிருக்கும் போதே.. 6 நாம் எல்லா ஜனங்களையும் கூட்ட முடியாது. அதை குறித்து நாம் விளம்பரம் செய்யவில்லை. எல்லா ஜனங்களையும் இந்த கூடாரத்தில் ஒன்று கூட்டுவதென்பது நம்மால் முடியாது. இங்கு ஐந்து நாட்கள் சகிக்க முடியாமல் இருக்கும். எனவே அங்குநான் அமர்ந்து கொண்டு சகோ. நெவிலுடனும் சகோ. உட்டுடனும் ஆலோசனை நடத்தினேன். முடிவில் இவ்வாறு செய்ய தீர்மானித்தோம். அப்படி ஐந்து ஆராதனைகளை வைக்க முடியாவிட்டால் - இருபத்தெட்டாம், இருபத்தொன்பதாம், முப்பதாம், முப்பத்தி ஒன்றாம் தேதிகளில் அடுத்த ஞாயிறு நாம் தொடங்கி, அன்று இரண்டு ஆராதனைகள் நடத்தலாம்- ஞாயிறு காலை, ஞாயிறு மாலை. அதாவது பதினெட்டாம் தேதியன்று. பிறகு இருபத்தைந்தாம் தேதியன்று ஞாயிறு காலை, ஞாயிறு மாலை ஆராதனை. ஆக மொத்தம் நான்கு ஆராதனை நடத்த விரும்புகிறேன். அதன் பின்பு ஜனங்கள் வீடு திரும்பி, அடுத்த வாரம் வரை அங்கு தங்கியிருக்கலாம். எல்லோரையும் ஒன்று கூட்டி ஜனநெருக்கத்தில் நசுக்கி விடுவதைக் காட்டிலும், இது நல்லதல்லவா? ஒரு நாளில். இரண்டு ஆராதனைகளை நாம் எப்படியாவது பொறுத்துக் கொள்ளலாம், ஆனால் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் நெருக்கப்படுவதென்பது மிகக் கடினம். நான் இங்குள்ளபோது, தர்மகர்த்தாக்களுடனும் மூப்பர்களுடனும் கலந்தாலோசிக்க விரும்புகிறேன். 7 இதுஎல்லாவிடங்களிலும் பரவி வருகின்றது. நாம் கடைசி நாட்களில் வாழ்ந்து வருகிறோம். சுவிசேஷத்திற்கு கொடுக்கப்பட வேண்டிய அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. அது பெறவேண்டிய உரிமையைப் பெற்றிருக்கவில்லை. அது அரசியலுடன் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. ஒரு சங்கத்தை (Union) போல். முடிவில் அப்படித்தான் அது வரவேண்டும். ஏனெனில் மிருகத்தின் முத்திரை ஒரு இணைப்பின் மூலமாகவே வரவேண்டுமென்று நமக்குத் தெரியும். அது பகிஷ்காரம் செய்தல் (boycott) பெற்றுள்ளவர் தவிர வேறு யாரும் கொள்ளவோ விற்கவோ முடியாது. 8 இப்பொழுது நான் மூப்பர்களின் ஆலோசனையைக் கேட்க ஏவப்படுகிறேன். என் வாழ்க்கையில் தேவனுக்காக நான் தற்போது என் இருதயத்தில் கொண்டுள்ள பசியைப் போல் நான் இதுவரை கொண்டதில்லை. எனக்குச் சொந்தமாக ஒரு கூடாரத்தை வாங்க நான் உத்தேசித்துள்ளேன். ஆண்டவர் எனக்களித்த தரிசனத்தின்படி. இப்பொழுது அந்த நேரம் வந்து விட்டது என்று நம்புகிறேன். நான் இங்கிருக்கும் போதே, நாம் ஏன் அந்த கூடாரத்தை வாங்கக் கூடாது? அப்பொழுது நாங்கள் ஜெபர்ஸன்வில்லுக்கு வரும் போது, ஒன்று அல்லது இரண்டு, மூன்று, நான்கு நாட்கள் கூட்டம் வைப்பதற்கு பதிலாக, நாம் வெளியே சென்று இந்த கூடாரத்தை நாட்டி, இரண்டு, மூன்று வாரங்கள் கூட்டங்கள் வைக்கலாம். அதைக் குறித்து யாருமே ஒன்றும் கூறமுடியாது. நாம் விளையாட்டு மைதானத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் அதைத் தரமறுத்தால், இங்கு ஒரு பண்ணையாளர் இருக்கின்றார், அவர் தமது பண்ணையை நமக்குத் தருவார். அதை நாம் வாடகைக்கு எடுத்துக் கொண்டு கூடாரத்தை அங்கு நாட்டலாம். நாம் செய்ய வேண்டிய கூடாரத்தை அங்கு நாட்டலாம். நாம் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று, நமது சௌகரியங்களுக்காக வெளிப்புற அறைகள் அமைத்துக் கொள்வதே. அதை நாம் எளிதில் செய்து விடலாம், அவ்வாறு நமது ஆராதனைகளையும், நாம் கர்த்தரிடத்திலிருந்து பெற்ற தரிசனத்தின்படி ஆரம்பிக்கலாம். அந்த முறையில் அது செய்யப்பட வேண்டும். 9 நேற்று வந்து இதை, அதை கண்டு கொண்ட பின்பு, நான் தெருவில் சென்று கொண்டிருந்த போது, என் நண்பர் ஒருவரைக் காண நேர்ந்தது. அவர், “ஹல்லோ, பில்லி'' என்றார். நான் அவரைப் பார்த்தேன். அவருடைய தலைமயிர் பனியைப்போல் வெண்மையாயிருந்தது. அவருக்கு இவ்வளவு பெரிய வயிறு இருந்தது. அவருக்கு என் வயது தான் இருக்கும். நாங்கள் சிறுவர்களாயிருந்த போது ஒன்றாக விளையாடினோம். அவர் மிகவும் அழகான வாலிபனாயிருந்தார். ஆனால் இப்பொழுதுள்ள அவருடைய நிலை என்னை வியப்பில் ஆழ்த்தியது. என் சிறிய மகன் ஜோசப், “அப்பா, ஏன் விசனமாயிருக்கிறீர்கள்?” என்று கேட்டான். நான், “ஓ, ஜோசப் அதை என்னால் உன்னிடம் விவரிக்க முடியாது. உன்னிடம் கூற இயலாது” என்றேன். பின்னால்அமர்ந்துள்ள எலேஜ் பெர்ரியையும் திருமதி பெர்ரியையும் நான் காணும் போது, நேற்று தான் அவர்கள் கறுத்த தலைமயிர் கொண்ட தம்பதிகளாய் இருந்தது போல் தோன்றுகிறது. அவர்கள் எனக்கு அடுத்த வீட்டில் குடியிருந்தனர். அப்பொழுது “வாஹு” என்னும் பழைய தோணி எங்களிடம் இருந்தது. நாங்கள் ஆற்றில் சென்று இரவில் மீன் பிடிப்பது வழக்கம். இப்பொழுது அவர்கள் இருவரையும் நரைத்த தலைமயிருடன் காணும்போது, அது ஒன்றை அறிவிக்கின்றது. “உனக்கு இன்னும் அதிக சமயம் இல்லை'' என்று அறிவிக்கும் எச்சரிப்பின் மணி தான் அது. பாருங்கள்? எனவே என் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் அவருக்காக செலவிடப்பட வேண்டுமென்று விரும்புகிறேன், எனக்கு எஞ்சியுள்ள இந்நேரத்தில் நான் எதையாவது எங்காவது செய்ய விரும்புகிறேன். அது தெரு மூலையில் நின்று கொண்டு தேவனுடைய கனத்துக்கும் மகிமைக்கும் சாட்சி கூறுவதாயிருந்தாலும் பரவாயில்லை. நான் அந்நோக்கத்திற்காகவே இங்கிருக்கிறேன். 10 இந்தியானாவிலுள்ள 'கிரீன்ஸ் மில்' என்னுமிடத்தில் எனக்கு ஒரு இரகசிய ஸ்தலம் உள்ளது. அது ஒரு பட்டினமல்ல, அது ஒரு வனாந்தரம். சிலர் அங்கு குடியேறி, நாம் அங்கு அடியெடுத்து வைக்க முடியாதபடிக்குச் செய்துவிட்டனர். ஆனால் எனக்கு அங்கு ஒரு குகை உண்டு. அதற்குள் நான் சென்றுவிட்டால், எவருமே என்னை கண்டுபிடிக்க முடியாது. நான் இரவு நேரத்தில் அங்கு செல்கிறேன். நான் எப்போழுது உள்ளே செல்கிறேன், எப்பொழுது வெளியே வருகிறேன் என்று எவருமே அறியார். அந்த குகை எங்குள்ளது என்று யாருக்குமே தெரியாது. அது எங்கிருப்பினும், அவர்களால் அங்கு செல்லமுடியாது. அங்கு நான் சென்று தேவனுடன் சற்று நேரம் பேச விரும்புகிறேன். அது அவசியம் என்று எனக்குத் தோன்றுகிறது. என் மனைவி இங்கு வந்து - ரெபேக்காளும் சாராளும் கூட தங்கள் நண்பர்களை சந்திக்க விரும்பினர். எனவே கர்த்தருக்குச் சித்தமானால், அடுத்த மூன்று வார காலம் நாங்கள் இங்கிருப்போம். 11 ஆராதனைக்காக இந்த கூடாரத்தில் எல்லோரையும் ஒன்று கூட்டி நெருக்குவதற்குப் பதிலாக... இந்த கூடாரம் நமக்குச் சொந்தமானது தான். அது கர்த்தருக்குச் சொந்தமானது. அவர் இதை நமக்குத் தந்துள்ளார். இது 'ஏர் கண்டிஷன்' செய்யப்பட்டுள்ளது. ஒரு ஞாயிறு காலை ஆராதனை, ஒரு ஞாயிறு இரவு ஆராதனை நடத்த விரும்புகிறேன். அதன் பின்பு ஜனங்கள் வீடு திரும்பி, அடுத்த வாரம் வரை அங்கு தங்கியிருக்கலாம். இந்த கடைசி கலசங்கள் ஊற்றப்படுவதைக் குறித்த செய்தியை எடுத்துக் கொண்டு என்னால் முழுவதுமாக விவரிக்க இயலாது. ஏனெனில் அதில் மிக மிகப் பெரிய செய்தி அடங்கியுள்ளது. எனவே நான் வியாதியஸ்தருக்காக ஜெபம் செய்து, அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடலாம். அது மாத்திரமல்ல, சபைக்கு அளிக்கவும் என்னிடம் செய்திகள் உள்ளன- கர்த்தர் எனக்குத் தந்த விதமாகவே. இந்த வாரம் நான் வனாந்தரத்தில் எங்காகிலும் சென்று வேதத்தைப் படித்து, ஞாயிறு காலையன்று திரும்ப வந்து, இன்று நடத்துவது போல் ஞாயிறு காலை ஆராதனை ஒன்றையும், ஞாயிறு மாலை ஆராதனையும் நடத்துவேன். நமது அருமையான போதகர் நெவிலிடம், அது அவருக்குத் திருப்தியளிக்குமா என்று கேட்டேன். அது அவரிடமிருந்த எல்லா ஆராதனைகளையும் பறித்துக்கொள்வதாகும். ஆயினும் அவையனைத்தையும் அவ்வாறு கொடுப்பதற்கு அவர் மிக்க மகிழ்ச்சியுள்ளவராயிருக்கிறார். 12 சகோ. காப்ஸுக்கும் சற்று வியாதியாயுள்ளதென்று நினைக்கிறேன், அவர் இங்கிருந்து மாறிப் போய்விட்டார்- சகோ. ஹ்யூம்ஸும் கூட. அந்த இடத்தை வகிக்க கர்த்தர் சகோ. மான்னை வைத்திருந்தார். கர்த்தர் செய்யும் செயல்கள் மிகவும் அற்புதமல்லவா? எல்லாவற்றையுமே அவர் சரியான நேரத்தில் செய்கிறார். நான் இங்கு வந்து யாரோ ஒருவர் பிரசங்கிப்பதைக் கேட்டேன். ''அது அவரல்ல என்று நினைக்கிறேன்...'' என்று எண்ணினேன். சகோ. காப்ஸ் டூசானுக்கு வந்தார். அது அவரை ஏமாற்றிவிட்டது. அங்கு வெப்பம் ஏறக்குறைய நூற்றுபத்து டிகிரி, அதனுடன் அவர் எவ்வித தொடர்பும் கொள்ள விரும்பவில்லை, எனவே அவரும் சகோ. ஹ்யூம்ஸும் அங்கிருந்து புறப்பட்டு பீனிக்ஸை அடைந்தனர். அங்கு இன்னும் கடுமையான வெப்பம் நூற்றுபதினைந்து, நூற்றுபதினாறு, நூற்றுபதினெட்டாக இருந்தது. எனவே அவர் அங்கிருந்து டெக்ஸாஸுக்கு சென்றார் என்று நினைக்கிறேன். ஒரு இடத்தை அவர் கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக்கிறார். ஆனால் வருடத்தின் இந்த சமயத்தில் நீங்கள் அரிசோனாவை விரும்பமாட்டீர்கள். சென்ற வெள்ளியன்று பார்க்கரில் வெப்பம் நூற்று நாற்பது டிகிரியை எட்டினது, நமது சபையைச் சேர்ந்த சகோ. க்ரெய்க் அங்குதான் வசிக்கிறார். நீங்கள் ஒரு முட்டையை உடைக்க நேரிட்டால், அது தரையில் விழும் முன்பு பொறிந்து விடும் (சகோ. பிரன்ஹாம் சிரிக்கிறார்- ஆசி). நீங்கள் துப்பினால் அது உடனே உலர்ந்துவிடும். அங்கு ஈரப்பதம் ஒன்றுமில்லை. வருடத்தின் இந்த சமயத்தில் அது பொறிக்கும் அடுப்பாகவே இருந்து வருகிறது. ஆனால் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில், அது மிகவும் நன்றாயுள்ளது. மார்ச்சு, ஏப்ரல் மாதங்களில் உங்களுக்கு மூச்சடைப்பு நேரிடாமல் இருக்கவேண்டுமானால், அங்கிருந்து போய்விடுவது நல்லது. சகோ.காப்ஸும் மற்றவர்களும் அப்படிப்பட்ட நேரத்தில் அங்கு வந்தனர். அது அவர்களை விரட்டியடித்துவிட்டது. கர்த்தர் அதை ஒரு நோக்கத்திற்காக செய்திருப்பார். நல்ல மனிதனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படுகிறது. (ஆங்கிலத்தில் - கட்டளையிடப்படுகிறது; தமிழாக்கியோன்) என்பதை நான் விசுவாசிக்கிறேன். சில நேரங்களில் அது கடுமையாகத் தோன்றுகிறது. 13 நான் ஆப்பிரிக்காவுக்குப் பயணத்தை மேற்கொண்டது போல். நான் தேவனுடைய சித்தத்தில் சென்று கொண்டிருப்பதாக முழு நிச்சயமாக நம்பினேன். ஏனெனில் ஒரு ஆண்டுக்கு முன்பு நான் அங்கு தென்பாகத்தில் கூட்டங்கள் நடத்தினேன் அவர்கள்... நான் நினைத்தேன். அவர்கள், ''நீங்கள் வேண்டுமானால் கிறிஸ்தவ வர்த்தகர் சங்கம் மூலம் வரலாம். ஆனால் நாங்கள் உங்களுடன் எவ்வித தொடர்பும் கொள்ளமட்டோம்“ என்று கூறினர். எனவே அவர்களுக்கு எந்த தொல்லையும் உண்டாக்க நான் விரும்பவில்லை. அவர்கள் ஒருவரோடொருவர் நல்லுணர்வுடன் இருப்பதையே நான் விரும்புகிறேன். எனவே நான்... (அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி), “நான் மறுபடியும் ஆப்பிரிக்காவுக்கு வர அநேக ஆண்டுகளாக முயன்று வருகிறேன். ஏனெனில் ஆப்பிரிக்காவில் என் ஊழியம் இன்னும் முடியவில்லை என்னும் உணர்ச்சி எனக்குள்ளது” என்று கூறினேன். எனக்கு கனடா, மெக்ஸிகோ போன்ற நாடுகளைத் தவிர அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மட்டும் அறநூறு, எழுநூறு பட்டினங்களிலிருந்து அழைப்பு வந்திருக்கும்போது நான் ஏன் ஆப்பிரிக்காவுக்கு செல்லவேண்டும்? என் இருதயத்திலுள்ள ஏதோ ஒன்று என்னை ஆப்பிரிக்காவுக்கு இழுக்கின்றது. அந்த ஜனங்களிலுள்ள ஏதோ ஒன்று அவர்களை நான் நேசிக்கச் செய்கின்றது. நான் கறுப்பு நிறத்தவரிடம் மாத்திரம் செல்ல விரும்புகிறேன். அங்கு ஜனங்களிலுள்ள ஏதோ ஒன்று அவர்களை நான் நேசிக்கச் செய்கின்றது. நான் கறுப்பு நிறத்தவரிடம் மாத்திரம் செல்ல விரும்புகிறேன், அங்கு தான் கர்த்தர் என்னை அழைத்திருக்கிறார். அவர்கள் தேவையுள்ள ஜனங்கள். அங்குள்ள வெள்ளையர்களுக்கு மருத்துவர்களிடம் செல்ல வசதியுண்டு. ஆனால் இந்த ஏழை சுதேசிகள் பயங்கரமான நிலையில் வாழ்கின்றனர். அவர்கள் தான் இதை ஏற்றுக் கொள்வார்கள் என்று தோன்றுகின்றது. அவர்கள் தான். அவர்களில் ஏதோ ஒன்றுள்ளது. 14 எல்லாவற்றையும் அறிந்திருக்கக் கூடிய புத்திசாதுரியம் உங்களுக்குண்டு என்று கருதும் நிலையை நீங்கள் அடையும் போது, தேவன் உங்களுக்கு ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால் நீங்கள் செவி சாய்த்து அறிந்து கொள்ள ஆயத்தமாயுள்ள நிலையை அடையும் போது, அது தான் தேவனுடைய நேரம். அப்பொழுது அவர் வந்து உங்களுடன் பேசுவார். எனவே நான்அவர்களுக்கு பதில் கடிதம் எழுதி, ''நியாயத் தீர்ப்பின் நாளிலே எலும்புகள் காணும் அந்த மெலிந்த கரங்கள் புகையினின்று வெளியே தோன்றி உங்களைக் குற்றப்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களுடைய இரத்தப்பழி உங்கள் தலைகளின் மேல் இருப்பதாக என்மேல் அல்ல. ஏனெனில் பத்து ஆண்டு காலமாக நான் மீண்டும் அங்கு வர முயன்று வருகிறேன்“ என்றேன். நான் கடிதத்தை அஞ்சல் பெட்டியில் போட்டு விட்டு திரும்பி வரும்போது ஏதோ ஒன்று, “சிட்னி ஜாக்ஸனைப் பார், வேட்டைப் பயணம் மேற்கொள்” என்றது. அதே சமயத்தில் தேவன் சிட்னி ஜாக்ஸனிடம் பேசி, “மஞ்சள் நிறப் பிடரி கொண்ட சிங்கம், சகோ பிரன்ஹாம் முகாமிடுகிறார்; டர்பன், பெரிய கூட்டம்” என்றார். அவர் இங்கு வந்திருந்தார், உங்களிடம் பேசினார். அவருக்கு நாங்கள் ஞானஸ்நானம் கொடுத்தோம்... கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்துக்கு அவர் முற்றிலும் விரோதமாயிருந்தார். அவரைக் காட்டிலும் அவருடைய மனைவி, அதைக் கேட்ட மாத்திரத்தில் அவர்கள் எழுந்து போய் விடுவார்கள்... நான் உங்களுக்குச் சொல்லுகின்றேன். அவர்களைப் போன்ற ஆர்வமுள்ள ஜனங்களை நான் கண்ட தேயில்லை. அவர்களிடம் நூற்றைம்பது போதகர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்று விட்டனர். அவர்கள் நாட்டை அசைத்துக் கொண்டிருக்கின்றனர். செய்தியானது ஆப்பிரிக்கா முழுவதிலும் துரிதமாக பரவிக் கொண்டிருக்கிறது. விமானிகள், இன்னும் அநேக பெரிய மனிதர்கள், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுகின்றனர். 15 எனவே நான் புறப்பட்டுச் செல்ல ஆயத்தமான போது, என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட தொல்லைகள் எனக்கு நேர்ந்ததில்லை. கடைசி நிமிடத்தில் என் விசாவில் அனுமதிச் சீட்டில் இவ்வாறு எழுதினர்: “எந்த மத சம்பந்தமான கூட்டங்களிலும் பங்கு கொள்ளக் கூடாது. வேட்டைக்கு மாத்திரம் செல்லலாம்”. நான், “பிசாசு என்ன செய்தாலும் எனக்குக் கவலையில்லை, சகோ. ஜாக்சன் கூறின மஞ்சள் நிறப் பிடரி கொண்ட சிங்கம். இது அது மற்றதைக் குறித்து நான் பொறுப்பல்ல, 'சிட்னி ஜாக்ஸனைக் கண்டு வேட்டைக்குப் போ' என்று தேவன் கட்டளையிட்டார் என்று மாத்திரம் அறிவேன். எனவே நான் போகிறேன் என்றாவது ஒரு நாள்...” என்றேன். ஒரு மகத்தான பயணம் எனக்கு உண்டாயிருந்தது. அங்கு என்ன தகராறு என்பதைக் கண்டு கொண்டேன். கர்த்தருக்குச் சித்தமானால் அக்டோபர் மாதம் நான் மீண்டும் ஆப்பிரிக்காவுக்குச் சென்று முழு ஒத்துழைப்புடன் கூட்டங்கள் நடத்தலாம். அங்கு சென்று அதற்கு மூலகாரணம் என்னவென்று கண்டு கொண்டேன். கடிதம் எழுதும்போது, ஒருவர் ஒருவிதம் கூறுகின்றார், வேறொருவர் வேறொரு விதமாகக் கூறுகின்றார். ஆனால் அதன் காரணம் என்னவென்று நாமே நேரடியாகக் கண்டுபிடிப்பது மிகச் சிறந்தது. தகராறு என்னவென்றும் எனக்குத் தெரியும், திரளான ஜனங்கள் ஒன்று கூடுவதை அரசு அனுமதிக்க மறுக்கின்றது. 16 எந்த ஸ்தாபனத்தாராகிலும் அழைப்பு விடுக்கும்போது அரசு தானாகவே... ஏனெனில் அந்த ஸ்தாபனம் அரசு அங்கீகாரம் பெற்றுள்ளது. அப்பொழுது பாதுகாப்பிற்காக அரசு இராணுவப்படையினரை அனுப்புகின்றது. ஆனால் ஒரு ஸ்தாபனத்திலிருந்து இருபத்தைந்து பேர், மற்றொரு ஸ்தாபனத்திலிருந்து இருபத்தைந்து பேர் ஒன்று கூடி ஒரு குழு அமைத்துக் கொண்டால், அரசு அதற்கு அங்கீகாரம் கொடுப்பதில்லை. அது ஒரு குறிப்பிட்ட ஸ்தாபனத் தலைவராக இருத்தல் அவசியம். கிறிஸ்தவ வர்த்தகர் குழு சபை பாகுபாடற்ற ஒரு சங்கம். அது எல்லா சபைகளுக்கும் பிரதிநிதித்துவம் வகிக்கின்றது. இதன் தலைவர் டாக்டர் சைமன் மிகவும் அருமையானவர். அவரை நான் சந்தித்து பேசவேண்டும். அவர்கள் தாம் இந்த கூட்டங்களை நடத்தப் போகின்றனர். எல்லா சபைகளும் அங்கு ஒன்று கூடும். ஆப்பிரிக்காவில் இதுவரை நடந்த கூட்டங்களிலே இது ஒரு மகத்தான கூட்டமாகத் திகழுமென நம்புகிறேன். 17 நான் கூற வந்தது என்னவெனில், எது சரியோ அதை நாம் செய்ய முயல்கிறோம். முதலாவதாக, ஒரு செயலைப் புரிய நீங்கள் ஏவப்பட்டால், அதை தேவனுடைய வார்த்தையுடன் ஒப்பிட்டுப் பார்த்து, அது சரியாயுள்ளதா என்று கண்டு கொள்ளுங்கள். அதன் பிறகு ஒன்றும் உங்களை தடுத்து நிறுத்த வேண்டாம். உங்கள் பாதையில் பிசாசு எவ்வளவு தடைகளைப் போட்டாலும் எனக்குக் கவலையில்லை. அதை தாண்டிச் செல்லுங்கள். நான் இங்கு வந்த பிறகு, என் மனைவியிடமும், சகோ. உட்ஸ்ஸிடமும், நேற்று சந்தித்த என் நண்பர்களிடமும் இதைப் பற்றி கூறினேன். இங்கிருந்த கடந்த ஐந்தாண்டு காலமாக எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. எனக்கு பயம்... பாருங்கள், சபைகளில் எழுப்புதல் நின்றுவிட்டது. எல்லோருக்கும் அது தெரியும் அதை நீங்கள் இந்த கூடாரத்தில் உணருகின்றீர்கள். எல்லாவிடங்களிலும் அதை உணருகின்றீர்கள். ஒரு மரித்த உணர்ச்சி ஏற்படுகின்றது. ஏதோ, சரியாக இல்லை. ஏனெனில் ஜனங்களிடையே இருந்த எழுப்புதல் உற்சாகம் மறைந்துவிட்டது. நீங்கள் சபைகளுக்குச் சென்று பாருங்கள், அவர்கள் அங்கு அமர்ந்திருப்பதைக் காண்பீர்கள். ஒரு செய்திக்காக போதகர் அங்கு தடுமாறிக் கொண்டிருக்கிறார். முதலாவதாக அவர் என்ன செய்கிறார் தெரியுமா? அவர்கள் நடத்தவிருக்கும் விருந்தைக் குறித்து பேசுகிறார். எங்கு பார்த்தாலும் “மரித்த நிலை” நிலவியுள்ளது. பில்லிகிரகாம் அதை கவனித்து வருகிறார்; ஓரல் ராபர்ட்ஸ், திரு. ஆலனுக்கு சில தொல்லைகள் ஏற்பட்டதென்று உங்களுக்குத் தெரியும். ஓரல் ராபர்ட்ஸ் 3 கோடி டாலர்கள் மதிப்புள்ள கட்டிடங்களை நிறுவியுள்ளார். யாருமே இப்பொழுது சுவிசேஷ ஊழியத்தில் ஈடுபடுவதில்லை. 18 ஒரு தரிசனத்தின் விளைவாக, நான் என்ன செய்ய கர்த்தர் விரும்புகிறார் என்பதை அறிந்துகொள்ள, டூசானுக்கு சென்றேன். அவர் என்ன செய்யப் போகிறார் என்று இங்கு கூறின விதமாகவே, அவர் அங்கு என்னை சந்தித்தார். ஏழு தூதர்கள் தோன்றினர். ஏழு முத்திரைகள் திறக்கப்பட வேண்டுமென்றும், நான் திரும்பிச் செல்ல வேண்டுமென்றும் என்னிடம் கூறினார். அது அப்படியே நிறைவேறினது. ஒரு நாள் நானும் சகோ. உட்டும் ஓரிடத்திற்கு சென்று ஒரு கல்லை மேலே தூக்கி போட்டபோது, அது கீழே வந்தது. அவர், “இன்னும் ஒரு காலை, ஒரு இரவுக்குள், நீ...''- அவர் கூறின வார்த்தைகள் எனக்கு மறந்துவிட்டது, ”நீ தேவனுடைய மகிமையைக் காணப்போகிறாய்“ என்றார். அடுத்த நாள் ஒரு சுழல் காற்று ஆகாயத்திலிருந்து இறங்கி வந்தது. நடந்த சம்பவம் என்னவென்று நமக்குத் தெரியும், அது மேலே சென்றபோது, அது என்னவென்று அவர்கள் கேட்டனர். நான், ”மூன்று வெடிகளின் மூலம் அது மூன்று வார்த்தைகள் பேசினது“ என்றேன், கூட இருந்தவர்கள் வெடி சத்தம் மாத்திரமே கேட்டனர். அது என்ன கூறினது என்று நான் புரிந்து கொண்டேன். அது, ”நியாயத்தீர்ப்பு மேற்கு கரையைக் கடக்கும்'' என்றது. இரண்டு நாட்கள் கழித்து அலாஸ்கா தண்ணீரில் மூழ்கியிருக்கும். எங்கு பார்த்தாலும் இடி முழக்கங்களும், பூமியதிர்ச்சிகளும், எல்லாமே சம்பவிக்கின்றன. அவைகளை சற்று பாருங்கள். நாள்தோறும் பல்வேறு பாகங்களை பூமியதிர்ச்சிகள் குலுக்கிக் கொண்டிருக்கின்றன. 19 நான் நிகழ்த்தின கடைசி கூட்டத்தின்போது, அதன் பின்பு உண்மையில் இதுவே நான் பிரசங்கிக்கும் முதல் பிரசங்கமாகும். நான் லாஸ் ஏஞ்சலிஸில் பில்ட்மோர் அரங்கத்தில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தேன். ஒரு மனிதன் தன் மனைவியைத் தெரிந்து கொள்வதைக் குறித்து அப்பொழுது நான் பேசினேன். அந்த ஒலிநாடா ஒருக்கால் உங்களிடம் இருக்கலாம். நான், “அது அவனுடைய குணாதிசயங்களையும், நோக்கத்தையும் பிரதிபலிக்கிறது” என்றேன். ஒரு மனிதன் ஒரு ஸ்திரீயை மனைவியாக ஏற்கும் போது, ஒரு வாலிப பெண்ணை தன் மனைவியாகக் கொள்கிறான். அவன் நவீனப் பெண் ஒருத்தியை- ஒரு சாதாரண “ரிக்கெட்டா”வை- தெரிந்து கொண்டால், அவன் யாரென்பதை அது காண்பிக்கிறது. அவன் ஒரு அழகு ராணியையோ அல்லது செக்ஸ் ராணியையோ விவாகம்செய்தால், அவனுக்குள் உண்மையில் என்ன இருக்கிறது என்பதை அது தெரிவிக்கின்றது. ஆனால் கிறிஸ்தவனோ ஒரு ஸ்திரீயில் நற்பண்புகளை எதிர்பார்க்கிறான். ஏனெனில் அந்த ஸ்திரீயுடன் தன் எதிர்கால வீட்டை அமைக்க அவன் திட்டமிடுகிறான். ஆகவே அவன் வீட்டை நன்றக் கட்டி, காக்கும் ஒருவளை மனைவியாகக் கொள்கிறான். நான், ''நமது எதிர்கால குடும்பம் எப்படியிருக்கும் என்று கிறிஸ்து தமது வார்த்தையில் கூறியுள்ளார். அப்படியிருக்க, அவர் எப்படிப்பட்ட மனைவியைத் தெரிந்து கொள்வார்? ஒரு ஸ்தாபன வேசியையா? இல்லை. தமது வார்த்தையை ஏற்றுக் கொள்ளும் நற்பண்பு கொண்ட ஒரு ஸ்திரீயையே அவர் தெரிந்து கொள்வார். அவளே அவருடைய மணவாட்டியாயிருப்பாள்“ என்றேன். 20 நான் அங்கிருந்த போது, ஏதோ ஒன்று என்னைத் தாக்கியது. முப்பது நிமிடங்கள் எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. ஒரு தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது. சகோ. மாஸ்லி, மற்றும் பில்லி, முதலாவதாக நான் நினைவுக்கு வந்த போது, நான் தெருவில் நடந்து கொண்டிருந்தேன். அது, ''தூதர்களின் பெயரால் உன்னை அழைத்துக் கொள்ளும் கப்பர்நகூமே!“ என்றது. அது லாஸ் ஏஞ்சலிஸ், தூதர்களின் (angels) பட்டினம் பாருங்கள், தூதர்கள். ''வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாள பரியந்தம் தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள் வரைக்கும் நிலைத்திருக்கும்”. இவையாவும் எனக்கு நினைவு இல்லாமலிருந்த போதே. பாருங்கள்? நான் எவ்வளவாக கிறிஸ்துவை உயர்த்தி சபைக்குச் சொல்ல ஆரம்பித்தேன், நான், “ஸ்திரீகளே, நான் எவ்வளவாக உங்களிடம் வந்து இவைகளுக்கு விரோதமாக பிரசங்கித்த போதிலும்; மனிதர்களே, போதகர்களே, நீங்கள் எப்பொழுதும் அதை நிராகரித்து, அதை செய்துகொண்டே வந்தீர்கள், தேவனுடைய வார்த்தை ஒன்றுமற்றது என்பது போல் அதை மிதித்து போடுகின்றீர்கள்'' என்றேன். 21 எனக்கு நினைவு வந்தபோது நான், “அப்படிப்பட்ட ஒரு வேத வாக்கியம் இருக்கிறதே” என்று சொல்லி அதை தேடினேன். அது இயேசு கடற்கரையிலிருந்த கப்பர்நகூமைக் கடிந்து கொள்வதாகும். அன்றிரவு நான் வேத வாக்கியங்களை ஆராய்ந்தேன், வீட்டுக்கு வந்து சரித்திரப் புத்தகங்களைப் படித்தேன். சோதோம் கொமோரா ஒரு காலத்தில் செழிப்புள்ள பட்டினமாகத் திகழ்ந்தது. அது உலகில் புறஜாதியாரின் தலைமை ஸ்தலமாக விளங்கினது. உங்களுக்குத் தெரியுமா? அந்த பட்டினம் பூமியதிர்ச்சியின் விளைவாக உப்புக் கடலுக்குள் (Dead Sea) மூழ்கினது. இயேசு அங்கு நின்றுகொண்டு, “கப்பர்நகூமே, உன்னில் செய்யப்பட்ட செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள் வரைக்கும் நிலைத்திருக்கும். நீ பாதாள பரியந்தம் தாழ்த்தப்பட வேண்டும்'' என்றார். அவர் தீர்க்கதரிசனம் உரைத்து இருநாறு அல்லது முன்னூறு ஆண்டுகள் கழித்து, மற்ற கடற்கரை பட்டினங்கள் ஒவ்வொன்றும் அப்படியே நிலைத்திருந்த போது, கப்பர்நகூம் மாத்திரம் கடலுக்கடியில் மூழ்கிவிட்டது, பூமியதிர்ச்சி ஒன்று அதை கடலுக்குள் மூழ்கடித்துவிட்டது. 22 பிறகு, “லாஸ் ஏஞ்சலிஸ் கடலுக்கடியில் மூழ்கிவிடும்'' என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது. நான் வீடு திரும்பி, பின்பு, ஆப்பிரிக்காவுக்குச் சென்றேன். நான் ஆப்பிரிக்காவில் இருந்த போது, லாஸ் ஏஞ்சலிஸில் பூமியதிர்ச்சி உண்டானது. விஞ்ஞானிகள்... நீங்கள் அதைப் பார்த்திருப்பீர்கள், அது தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது. லாஸ் ஏஞ்சலிஸில் சில பெரிய, அழகிய வீடுகள் இடிந்துபோயின- ஒரு விடுதியும் (motel) கூட, இப்பொழுது அங்கு... அந்த பூமியதிர்ச்சி நேர்ந்த முதற்கு, இரண்டு அல்லது மூன்று அங்குலம் அகலமுள்ள ஒரு பிளவு பூமியில்உண்டாகியுள்ளது. அது அலாஸ்காவில் தொடங்கி, அலூசியன் தீவுகளைச் சுற்றி வந்து, கடலுக்குள் சுமார் நூறு அல்லது நூற்றைம்பது மைல்கள் தூரம்சென்று, மறுபடியும் சான்டியாகோவுக்கு வந்து கலிபோர்னியா அல்லது லாஸ்ஏஞ்சலிலை அடைந்து, மறுபடியுமாக கலிபோர்னியாவின் வடபாகத்தின் கீழ் சான்ஜோஸ் என்னும் சிறிய இடத்திற்கு வந்துள்ளது. 23 இந்த விஞ்ஞானி, அவரைப் பேட்டி கண்டபோது பேசினார். நாங்கள் அதைத் தொலைகாட்சியில் கண்டோம். அவர், “அதன் கீழ் சுழலும் பாறைக் குழம்பு (Lava) உள்ளது'' என்றார். அவர் மேலும், ”அந்த துண்டிக்கப்பட்ட பகுதி (chunk) உடைந்து வந்து விடும் '' என்றார். இந்த தலைமை விஞ்ஞானியை பேட்டி கண்ட விஞ்ஞானி “அப்படியானால் அது மூழ்கிவிடுமா?'' என்று கேட்டதற்கு, அவர், ''மூழ்கி விடுமா என்ன? அது மூழ்கத்தான் வேண்டும்'' என்று பதிலளித்தார். “ஆனால் அது அநேக ஆண்டுகள் கழித்து நடக்கும் ” என்றார். அவர், “ஒருக்கால் அது இன்னும் ஐந்தே நிமிடங்களில் நடக்கலாம், அல்லது ஐந்து ஆண்டுகள் ஆகலாம்'' என்றார். அவர் அதற்கு ஐந்து ஆண்டுகள் சமயம் கொடுத்தார். நான் நிச்சயமாக பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் அங்கு நின்று கொண்டிருந்தபோது, அது மேற்கு கடற்கரைக்கு நியாயத் தீர்ப்பைக் கொண்டு வந்தது, அதைத் தொடர்ந்து லாஸ் ஏஞ்சலிஸ் மூழ்கும் தருவாயில் உள்ளது. அவள் போய்விட்டாள்! அது உண்மை . அது நிகழ்ந்தே தீரும். எப்பொழுது? எனக்குத் தெரியாது. ஓ, என்ன நேர்ந்தது? இப்பொழுது நமக்கு ஆறு கண்டங்கள் மாத்திரமேயுள்ளன. நமக்கு ஏழு இருந்தன, ஆனால் ஒன்று ஆப்பிரிக்காவுக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் நடுவில் மூழ்கிவிட்டது. ஓ, அது சரித்திர ஆதாரமானது. அது உங்களுக்குத் தெரியும். லாஸ் ஏஞ்சலிஸ் தண்ணீரில் மூழ்குமானால், அதை நீங்கள் கவனித்து வரவேண்டுமென்று விரும்புகிறேன். 24 சகோ. எலஜ் பெர்ரி இங்கு மூப்பராக இருந்தபோது, இந்த பிரசங்கத்தை நான் நிகழ்த்தினேன் என்று நினைக்கிறேன். ''அந்த சமயம் வரும்...“ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. திருமதி. சிம்ப்சன் அந்த பிரசங்கத்தை என்னிடம் அன்றொரு நாள் கொண்டுவரும் வரைக்கும், அதை அறியாதிருந்தேன். அதை ஒரு சிறுபுத்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டேன்... ”சமுத்திரம் அழுது கொண்டே வனாந்தரத்தை அடையும்.'' அது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கூறப்பட்டது. சால்டன் கடல், கடல் மட்டத்திற்கு இருநூறு அடி கீழேயுள்ளது. அந்த பெரிய சுழலுதல் நிகழ்ந்து, பூமி நூற்றுக்கணக்கான சதுர மைல்கள் பரப்பு கொண்ட பாகத்தை விழுங்கி அது பூமிக்கடியில் செல்லும்போது, அது அரிசோனாவில் அது பேரலையை (tidal wave) நிச்சயம் தோன்றச் செய்யும். 25 ஓ, நாம் முடிவு காலத்தில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிரசன்னமாக வேண்டிய அந்த மகத்தான நேரத்தில் இருக்கிறோம். அவர், ''பல இடங்களில் பூமியதிர்ச்சிகள் உண்டாகும், தடுமாற்றமான நேரம், ஜாதிகளினிடையே விரோதம், மனிதரின் இருதயங்கள் பயத்தினால் சோர்ந்து போகும். இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது நீங்கள் நிமிர்ந்து பார்த்து உங்கள் தலைகளை உயர்த்துங்கள். ஏனென்றால் உங்கள் மீட்பு சமீபமாயிருக்கிறது'', என்றார். ஓ, என்னே! %நாடுகள் உடைகின்றன, %இஸ்ரவேல் விழித்தெழும்பினான் %இவை தீர்க்கதரிசிகள் முன்னுரைத்த அடையாளங்களாம் %புறஜாதிகளின் நாட்கள் எண்ணப்பட்டுள்ளன, %திகில் எங்கும் சூழ்ந்துள்ளது %சிதறப்பட்டோரே, உங்கள் மந்தைக்குத் திரும்புங்கள் (அதை நிச்சயமாக செய்யுங்கள்) %அந்த மீட்பின் நாள் சமீபமாயுள்ளது %மனிதரின் இருதயங்கள் பயத்தினால் சோர்ந்துள்ளன %பரிசுத்த ஆவியால் நிறைந்து, %உங்கள் தீவட்டிகளை சுத்தப்படுத்தி நிமிர்ந்து பாருங்கள், %உங்கள் மீட்பு சமீபமாயுள்ளது! (அது உண்மை ). %கள்ளத்தீர்க்கதரிசிகள் பொய்யுரைக்கின்றனர் %கிறிஸ்துவாகிய இயேசுவே நமது தேவன் என்னும் %தேவனுடைய சத்தியத்தை அவர்கள் மறுதலிக்கின்றனர். 26 (ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி) அந்த படத்தை அன்று பார்த்தீர்கள் அல்லவா? - அவர் எப்படி அதை பக்கவாட்டில் திருப்பினார் என்று? ஏழு தூதர்களின் மேலே சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம்- அதை வலது பக்கம் திருப்பிப் பாருங்கள். அப்பொழுது பூமியை நோக்கிக் கொண்டிருக்கும் கர்த்தராகிய இயேசுவின் முகத்தைக் காண்பீர்கள். நான் ஏழு சபை காலங்களைக் குறித்து பிரசங்கித்தபோது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? இயேசு ஏன் வெண்மையான சிரசின் மயிரைக் கொண்டிருந்தார் என்று எனக்கு விளங்கவில்லை. அவர் ஒரு வாலிபன். நான் வேதாகமத்தை படித்தபோது, “அவர் நீண்ட ஆயுசுள்ளவரிடம் கொண்டுவரப்பட்டார். அவருடைய சிரசும் மயிரும் வெண் பஞ்சைப் போல் வெண்மையாயிருந்தது'' என்று அதில் இருந்தது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது, அவருக்கு முப்பத்தி மூன்றரை வயது மாத்திரமே ஆகியிருந்தது நான் சகோ. ஜாக் மூரிடம் சென்றேன். அவர் ஒரு வேத பண்டிதர். அவர், “ஓ, சகோ. பிரன்ஹாமே, அது இயேசு மகிமையடைந்த நிலையில் இருத்தல், அவருடைய மரணம், அடக்கம், உயிரித்தெழுதலுக்குப் பிறகு அவர் அந்த நிலையையடைந்தார்'' என்றார். அது வேத பண்டிதருக்கு சரியான விளக்கமாகத் தோன்றியிருக்கலாம். ஆனால் அது எனக்கு சரியென்றுபடவில்லை. அதனுடன் அது இணையவில்லை. நான் அங்கு சென்று முதலாம் சபையின் காலத்தைக் குறித்து தொடங்கினேன். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அதை வெளிப்படுத்தித் தந்தார். அது 'சபை காலங்கள்' செய்திகளில் உள்ளது, வெகு விரைவில் முழு விவரணமும் கொண்ட அந்த புத்தகம் வெளியாகும். இயேசு நியாயாதிபதியாக இருப்பதை அது காண்பிக்கிறது. நீதிபதிகள் ஒருவித வெள்ளை தலை அங்கிகளை (wig) அணிவது வழக்கம். (இங்கிலாந்தில் இப்பொழுதும் அந்த வழக்கம் உள்ளது.) ஒருவர் மிக உயர்ந்த (Supreme) அதிகாரத்தைப் பெறும்போது அப்படி செய்கிறார். இந்த புகைப் படத்தை பக்கவாட்டில் திருப்பிப் பார்த்தால், அவருடைய தாடியின் பக்கத்தில் அவருடைய கறுப்பு மயிரை நீங்கள் காணலாம். அவர் வெள்ளை தலை அங்கியை அணிந்துள்ளார். அவரே அதிகாரத்தின் அந்தமானவர். அவர் மிக உயர்ந்த அதிகாரமுடையவர். தேவனும் தாமே, “இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவி கொடுங்கள்” என்றார். 27 அதோ அவர் தூதர்களுடன் காணப்படுகிறார். அந்த செய்தி. அதுதான் ஏழு முத்திரைகள் திறக்கப்பட்டு, சர்ப்பத்தின் வித்து போன்றவை வெளிப்படுதல். அது அவருடைய தலையை மூடியிருந்த தலைஅங்கி. அவருடைய மிக உயர்ந்த அதிகாரம். அவர் மேலான அதிகாரமுடையவர். அவர் தலை அங்கியைத் தரித்திருக்கிறார்- மூடப்பட்டிருக்கிறார். அவர் தமது முக நாடியை (countenance) மாற்றிக்கொண்டார் அல்லது அவர் தம்மை மாற்றிக்கொண்டார் என்று வேதம் கூறுகின்றது. அது 'என்மார்ப்' (en morphe) என்னும் கிரேக்க சொல்லிலிருந்து வருகிறது. ஒரு கிரேக்க நடிகன் நாடகத்தில் அநேக பாகங்களை வகிக்கிறான். இப்பொழுது அவன் ஒரு பாகத்தை வகிப்பான். அடுத்த கட்டத்தில் வேறொரு கதாபாத்திரமாக மாறிவிடுவான். அவ்வாறே நாடகத்தின் ஒரு அங்கத்தில் - (act) அவர் தேவனாகிய பிதாவாக இருந்தார். மற்றொரு அங்கத்தில் தேவனாகிய குமாரன். இப்போதைய அங்கத்தில் அவர் தேவனாகிய பரிசுத்த ஆவி, பாருங்கள். அதோ அவர். அவருடைய வார்த்தை இன்றும் மேலானதாக உள்ளது. நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம். 28 நான் ஆப்பிரிக்காவிலிருந்து அன்று தான் திரும்பி வந்தேன். எனக்கு ஒருவாறு களைப்பாயுள்ளது பாருங்கள். இப்பொழுது அங்கு இரவு நேரம், நீங்கள் உறங்க வேண்டிய நேரம். அந்த நிலைக்கு என்னை சரிபடுத்திக் கொண்டவுடனே நான் திரும்பி வந்துவிட்டேன். எங்களுக்கு அது மிகவும் அருமையான வேட்டைப் பயணமாய் இருந்தது. என் வாழ்க்கையில் இருந்த சிறந்த வேட்டைப் பயணங்களில் இதுஒன்று. பில்லி சில புகைப்படங்கள் எடுத்தான். அந்த பயணத்தில் எடுத்த புகைப்படங்களை அவன் எப்பொழுதாவது எங்காவது காண்பிப்பான். நான் ஒரு சொப்பனம் கண்டேன். நான் மறுபடியும் பொதுப் பணி நிர்வாகத்திற்கு திரும்பிசென்று வேலையில் அமர்வது போல் அடிக்கடி சொப்பனம் காண்கிறேன். அந்த சொப்பனத்தில் நான் வேலைக்குச் சென்றேன். அவர்கள் என் விருப்பபடி என்னை விட்டுவிட்டார்கள். நான் வீடுகளில் சென்று மின்சாரக் கட்டணத்தை வசூலிப்பதற்கு பதிலாக “'நானே எனது முதலாளி” என்று கூறிவிட்டு நீச்சலடிக்க சென்றுவிட்டேன், இந்த உடைகளை அவிழ்த்துவிட்டு நீச்சல் உடையைப் போட்டுக் கொண்டேன். நான் தனியாக இருந்தேன். ''நான் செய்வது சரியல்ல, இந்த நேரத்திற்கு நிர்வாகம் ஊதியம் தருகின்றதே'' என்று மனதில் எண்ணிக் கொண்டேன். நான், ''நான் வழியில் சேகரித்த மின்சாரக் கட்டணமும் என் பணமும் ஒன்றாக கலந்துவிட்டதே. தான் ரசீதுகளைத் தொலைத்துவிட்டேனே, யார் மின்சாரக் கட்டணம் செலுத்தினார் என்று எப்படி, அறிவேன்? நான் போதிய கவனம் செலுத்தாததினால் இப்படி நேர்ந்து விட்டது. அது சரியல்ல“ என்று நினைத்தேன். ”இப்பொழுது நான் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். நான் என் மேலதிகாரியிடம் சென்று இதை சொல்லி விடுவேன்'' என்று எண்ணினேன். (அவர் தான் டான் வில்லிஸ்). நான் அவரிடம் சென்று, ''டான், நான் ரசீதுகளை தொலைத்துவிட்டேன். இதோ என்னிடமுள்ள எல்லா தொகையும், அவர்களுடைய பணம் இதில் கலந்துள்ளது. அதை நான் காஷியரிடம் கொடுத்துவிடுகிறேன். ஜனங்கள் இங்கு வரும்போது, அவர்களிடம் பணம் வசூலித்தேன் என்பதன் அத்தாட்சியாக அவர்கள் ரசீதுகளைப் பெ ற்றுக் கொள்வார்கள்“ என்றேன் . 29 இங்கு அமர்ந்துள்ள சிலர்... அப்படிப்பட்டவர்கள் இங்குள்ளனர் என்று எனக்குத் தெரியும். நான் வேலையில் இருந்த போது மின்சாரக் கட்டணம் வசூலித்து அதற்கான ரசீதுகளைக் கொடுப்பேன் என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டணத்தை நிர்வாகத்துக்கு அனுப்பாமல் போனால், பத்து சதவிகிதம் கூடுதலாகக் கட்டவேண்டும். அது ஒரு டாலர் ஐம்பது சென்டு- அதாவது பதினைந்து சென்டுகள் கூடுதலாகிவிடும். காலதாமதமான கட்டணங்களை வசூலிக்க நான் அனுப்பப்படுவேன். அநேகருக்கு என்னுடன் பேசுவதற்கு ஆவல். எனவே நான் அவர்களிடம் சென்று பேசவேண்டும் என்பதற்காகவே அவர்கள் கட்டணத்தை செலுத்தாமல் விட்டுவிட்டு, நான் சென்று வசூலிக்கப்படவேண்டிய கட்டணங்கள் அதிகமாக கூடிவிட்டது. என்னால் வசூலிக்க முடியவில்லை. இப்படித்தான் செய்ய வேண்டும் என்று யோசித்தேன். அப் பொழுது உறக்கத்தினின்று விழித்துக் கொண்டேன். 30 நாங்கள் இப்பொழுது சகோதரி லார்சன் வீட்டில் தங்கியிருக்கிறோம். அவர்கள் இங்கில்லை என்று நினைக்கிறேன். அவர்கள் எங்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்ளுகிறார்கள். அதை நான் வெளிப்படையாய் கூறுவதை அவர்கள் விரும்புவதில்லை. அவர்கள் மிகவும் அருமையான சீமாட்டி. அவர்களுடைய அறைகளில் தான் நாங்கள் தங்கியிருக்கிறோம். அவர்களுக்கு இரண்டு 'வரிசை அறைகள்' (apartments) ஒன்று சேர்ந்தாற் போல் உள்ளன. அவையிரண்டையும் நாங்கள் வாடகைக்கு எடுத்திருக்கிறோம். ஒரு 'வரிசை' அறையில் நானும் மனைவியும் உறங்குகிறோம். மற்றதை நான் ஜனங்களை சந்திப்பதற்கு உபயோகிக்கிறேன். அங்கு இரண்டு, இருவர் படுக்கும் கட்டில்கள் உள்ளன. நான் உறக்கத்தினின்று எழுந்தேன். என் மனைவி அப்பொழுது எழுந்திருக்கவில்லை. சற்று கழிந்து அவளும் எழுந்தாள். நான் அவள் மேல் என் கையை ஆட்டினேன். அவள் சில முறை கண்களை சிமிட்டுவிட்டு என்னைப் பார்த்தான். “நன்கு உறங் கினாயா?” என்றுகேட்டேன். அவள், “இல்லை” என்று பதிலளித்தாள். நான், “மிகவும் மோசமான சொப்பனம் ஒன்று கண்டேன். நான் மறுபடியும் பொதுப்பணி நிர்வாகத்தில் சேர்ந்துவிட்டதாக சொப்பனம் கண்டேன். நான் என்ன தவறு செய்தேன்?'' என்றேன். 31 நான் வாலிபனாக இருந்தபோது, இந்தியானாவிலுள்ள சாலேம் என்னுமிடத்தில் வேலையில் நடந்துசெல்வது என் நினைவுக்கு வருகிறது... நான் சென்று காலை உணவை விலக்கு வாங்கிக் கொள்வேன்- ஒரு பாத்திரம் நிறைய ஓட்ஸ் போன்ற ஏதாவதொன்றை. அந்த வெய்யிலின் உஷ்ணத்தில் காலை உணவை அருந்துவது வெறுப்பாயிருக்கும். என் வழிச் செலவுக்காக கொடுக்கப்படும் பணத்திலிருந்து பத்துசென்டு கொடுத்து காலை உணவை வாங்கிக்கொள்வது வழக்கம். மேலதிகாரி என்னிடம், ''அந்த கூட்டத்தில் என்ன பேசிக் கொண்டார்கள் தெரியுமா? “காலை உணவிற்கு பத்துசென்டுகள் கொடுக்கும் அந்த மடையன் யார்?” என்பதாக. “நீ ஐம்பது சென்டுகளாவது கொடுக்க வேண்டும்” என்றார். அந்த காலத்தில் ஐம்பது சென்டுகளுக்கு நிறைய காலை உணவு கிடைக்கும். நான், “என்னால் அவ்வளவு சாப்பிட முடியாது” என்றேன். அவர், ''மற்றவர்கள் ஐம்பது சென்டுகள் கொடுக்கும்போது. நீயும் ஐம்பது சென்டுகள் கொடுக்க வேண்டும்'' என்றார். நான், “அவ்வளவையும் நான் சாப்பிடப் போவதில்லை” என்றேன். “எப்படியாயினும் அதைசெலுத்த வேண்டும்” என்றார். (அவர் தான் என் மேலதிகாரி). “நான் ஐம்பதுசென்டுகள் கொடுத்துவிட்டு, பத்து சென்டுகளுக்கு மாத்திரம் உண்பதா?” என்று நினைத்தேன். எனவே நான் தெருக்களில் சென்று, காலை உணவு அருந்தாத சிறு பிள்ளைகளை அழைத்து, நாற்பது சென்டுகள் பெறுமானமுள்ள காலை உணவை கொடுத்துவிடுவேன். பிறகு நான் நினைத்தேன்; “ஒருக்கால் இதற்காகத்தான் அவர் என்மேல் குரோதம் கொண்டிருக்கிறாரோ?'' என்று. 32 சில நாட்களுக்கு முன்பு அவர்கள் ரோந்து வந்து என் வீட்டின் பின்பக்கத்திலுள்ள புழக்கடையை இடித்து விட்டு, ''கட்டணத்தை செலுத்து“ என்றார்கள். அவர்களுக்கு ரோந்து உரிமையுண்டு. ஆனால் உடைத்ததற்கு அவர்கள் நஷ்ட ஈடு செலுத்த வேண்டும். நான், ''நான் ஒன்றுமே செலுத்த வேண்டியதில்லை'' என்று பதில் கடிதம் எழுதினேன்.. ''நான் ஒவ்வொரு முறையும் 40 சென்டுகள் செலவழித்ததற்கு சரியாய் போய் விட்டது . அப்பொழுது நான் இருபது, முப்பது டாலர்கள் செலவழித்து அதை சிறுவர்களுக்கு கொடுத்திருக்கிறேன். அது சரியாய் போய்விட்டது” என்று எண்ணினேன். இப்படியாக சொப்பனம் கண்டு கொண்டேயிருந்தேன். அங்கு ஒரு பெரியமரம் இருந்தது. பிள்ளைகள் அதன் நிழலில் விளையாடுவார்கள். ரோந்து வருபவர். இப்பொழுது அவர்கள் ஹெலிகாப்டரில் ரோந்து வருகின்றனர். அவர் வந்து, “பில்லி, அந்த மரத்தை வெட்டிவிடலாமா?'' என்றுகேட்டார். நான், ''வேண்டாம், நானும் சகோ. உட்டும் அதன் கிளைகளை வெட்டப்போகிறோம்“ என்றேன். அவர், “நான் ஒரு ஆளை அனுப்பி கிளைகளை வெட்டிவிடுகிறேன்” என்றார். நான், “வேண்டாம்” என்றேன். அவரும், “நான் வெட்டமாட்டேன்'' என்று உறுதியளித்தார். நான் பயணம் சென்றுவிட்டேன். நான் திரும்பி வந்தபோது, அது தரைமட்டம் வரைக்கும் வெட்டப்பட்டிருந்தது. பிறகு அவர்கள் என் மேல் தொடுத்த வழக்கு வரவிருக்கிறது. நான், ''ஆண்டவரே, அவர்களுக்கு நான் செலுத்தவேண்டிய பாக்கிக்கு இது சரியாய்போய் விட்டது“ என்று சொல்லி விட்டு அதை அப்படியே விட்டுவிட்டேன். அதைக் குறித்து இன்னமும் சொப்பனம் கண்டன். 33 அன்று காலை உறக்கத்தினின்று எழுந்தேன். நாங்கள் காலையில் எழுந்தவுடன் முதலாவதாக செய்வது, ஒன்றாக ஜெபிப்பதே, அவ்வாறே இரவில் படுக்கச் செல்லும் முன்பும் ஜெபம் செய்வோம். பிள்ளைகளின் காலை உணவை ஆயத்தம் செய்ய அவள் சென்றபோது, நான் ஜெபம் செய்ய ஆரம்பித்தேன். நான், ''ஆண்டவரே, நான் மோசமான மனிதனாக இருக்கவேண்டும். பொதுப்பணி நிர்வாகம் என் நினைவை விட்டு அகலக்கூடாத அளவுக்குநான் வாழ்க்கையில் என்ன தவறு செய்தேன்?“ என்று கேட்டேன். நான் குளித்துவிட்டு திரும்பி வந்தேன். ஏதோ ஒன்று, ”ஒருக்கால் அவருடைய வேலையை விட்டு நீ ஓடிப் போகப் பார்க்கிறாய்“ என்று என்னிடம் கூறுவது போல் தோன்றிற்று. ''ஐந்து ஆண்டு காலமாக நான் ஒன்றுமே செய்யாமல் அவருக்காக காத்திருக்கிறேனே” என்று நினைத்தேன். 34 அன்று அங்கு நின்று கொண்டிருந்தேன். அவர்கள் எனக்குப் புதிய வீடு ஒன்றைக் கட்டினார்கள், சகோ. மாஸ்லி வந்து அதைக் குறித்து பேசிக் கொண்டிருந்தார். நான், “என் பிதாவிடமிருந்து எனக்குக் கிடைத்த ஒரு சிறு வெகுமதி'' என்றேன். நான் அவரிடம், ''பாருங்கள், 'உங்கள் வீடுகளையோ, நிலங்களையோ, தகப்பன்மார்களையோ, தாய்மார்களையோ விட்டால், நான் உங்களுக்கு இம்மையில் நூறத்தனையாக வீடுகளையும், நிலங்களையும், தகப்பன்மார்களையும், தாய்மார்களையும் மறுமையில் நித்திய ஜீவனையும் தருவேன்' என்பதாக அவர் வாக்களித்துள்ளாரே! பாருங்கள், நான் மிகவும் அருமையாய் நேசித்த என் சபையை நான் விட வேண்டியதாயிற்று. கர்த்தர் எனக்குக் கொடுத்த வீட்டை நான் விட வேண்டியதாயிற்று. ஆனால் அதற்குப் பதிலாக அவர் எனக்கு இந்த வீட்டை தந்துவிட்டார். அவர் அற்புதமானவர் பாருங்கள்” என்றேன். அவர் அழ ஆரம்பித்துவிட்டார். நான், “என்னை நான் பிரித்துக் கொண்டு இந்த வனாந்தரத்துக்கு வரவேண்டியதாயிற்று. என்னை ஏன் தேவன் தேள்களும் விஷ ஜந்துக்களும் நிறைந்த இந்த வனாந்தரத்துக்கு கொண்டு வரவேண்டும் என்று வியப்புறுகிறேன்” என்றேன். 35 அது மிகவும்உஷ்ணமான ஒரு வனாந்தரம் மாத்திரமல்ல, ஆவிக்குரிய பிரகாரமாகவும் அது ஒரு வனாந்தரம். ஓ, என்னே ! அங்குள்ள சபைகளில் ஆவிக்குரிய ஜீவனே இல்லை. அவர்கள் அதற்கு விரோதமாக... ஏன், அப்படிப்பட்ட ஒன்றை உங்கள் வாழ்க்கையில் கண்டிருக்கவே மாட்டீர்கள். எங்களுக்குப் போக ஒரு சபையும் கூட இல்லை, ஒன்றுமேயில்லை... ஜனங்கள்ஆவிக்குரிய விதமாக ஏறக்குறைய அழிந்து வருகின்றனர். அங்குள்ள ஜனங்களில் அதைக் காண்கிறேன். அவர்களிலுள்ள வித்தியாசத்தை நான் கவனித்து வருகிறேன். எனவே நாம் தேவனுடைய ஆவியின் கீழ் தங்கியிருக்கும் போது, உங்கள் வாழ்க்கை இனிமையாகவும் மிருதுவாகவும் ஆகிவிடுகின்றது. தண்ணீர் இந்த புல்லையும் மிருதுவான மொட்டுக்களையும் வளரச் செய்வது போல். அரிசோனாவில் இந்த புல் வளராது. இந்த மரங்கள் அனைத்தும் முட் செடிகளாக (Cactus) இருக்கும். அதன் இலைகள் முறுக்கிக் கொண்டு, பிசுபிசுவென்று ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டிருக்கும். சபையிலும் வரண்ட நிலை வரும்போது, அப்படித்தான் ஆகிவிடுகின்றது. எல்லோருமே ஒருவரோடொருவர் ஒட்டிக் கொண்டுள்ளனர். உங்களை மிருதுவாக்க மழையின் மிருதுவான தண்ணீர் அவசியமாயுள்ளது. அப்பொழுது அதில் இலைகள் தோன்றி, கடந்து செல்லும் பயணிகள் அதன் நிழலில் தங்குவதற்கு அது ஏதுவாயிருக்கும். 36 ஏதோ ஒன்று என்னிடம், “நீர் தேவனுடைய வேலையை விட்டு ஓடிப் போகப் பார்க்கிறாய்” என்றது. எனவே ஒரு தரிசனத்துக்காக நான் ஜெபம் செய்தேன். மேடா இப்பொழுது தான் எனக்கு ஒரு புது வேதாகமம் வாங்கித் தந்தாள், ஓஹையோவைச் சேர்ந்த சகோ. பிரவுனும் கூட, எனக்கு ஒரு புது வேதாகமத்தை வாங்கித் தந்தார். இருவரும் ஒரே நேரத்தில் கிறிஸ்துமஸின் போது வாங்கித் தந்தனர். அவைகளில் ஒன்றை நான் எடுத்துக் கொண்டு, “கர்த்தாவே, முற்காலங்களில் ஊரீம் தும்மீம் உண்டாயிருந்தன” என்றேன். இப்பொழுது கவனியுங்கள், இதை நான் கூற விரும்புகிறேன்... அவர்கள் இதை ஒலிப்பதிவு செய்யவில்லை. அதற்கு காரணம், நான் கேட்கிறேன்... இதை நான் கூற விரும்புகிறேன். அதை செய்ய வேண்டாம், அது நல்லதல்ல. நான், “கர்த்தாவே, ஒரு சொப்பனக்காரன் சொப்பனம் ஒன்றைக் கண்டால், அவர்கள் ஊரீம் தும்மீமிடம் சென்று அதை கூறுவார்கள், அப்பொழுது ஊரீம் தும்மீமில் வெளிச்சம் பிரகாசித்தால் இயற்கைக்கு மேம்பட்ட ஒளி- அந்த சொப்பனம் உண்மையென்று அர்த்தம். ஆனால் ஆசாரியத்துவமும், ஊரீம் தும்மீமும் அகற்றப்பட்டுவிட்டன. உமது வேதாகமமே இப்பொழுது ஊரீம் தும்மமாக உள்ளது. இதை நான் மறுபடியும் செய்யாதிருப்பேனாக. உம்மிடம் நான் ஜெபித்து, எனக்கு ஒரு தரிசனத்தை தரும்படி கேட்டேன். நான் ஏன் சொப்பனங்களைக் காண்கிறேன் என்று என்னிடம் கூறும்படி கேட்டேன். நான் என்ன தவறு செய்தேன்? நான் உலகில் யாருக்காவது தீங்கிழைத்திருந்தால், அதை சரிசெய்துவிடுகிறேன். நான் பொதுப்பணி நிர்வாகத்துக்கு கடன்பட்டிருந்தால் அல்லது வேறுயாருக்கோ தவறிழைத்திருந்தால், உமக்கு நான் தவறிழைத்திருந்தால் எனக்கு தெரியப்படுத்த வேண்டுகிறேன். அதை நான் சரிபடுத்த விரும்புகிறேன்'' என்றேன். இப்பொழுதே நாம் அதை சரிபடுத்துவோம். அதற்காக சற்றும் காத்திருக்க வேண்டாம். ஒருக்கால் அப்பொழுது காலதாமதமாகிவிடும். இப்பொழுதே அதை செய்வோம். 37 நான், “இந்த தேவனுடைய வார்த்தையில் ஆதியாகமம் தொடங்கி வெளிப்படுத்தின விசேஷம் முடிய நிச்சயமாக ஏதோ ஒன்றுள்ளது. அதில் காணப்படும் ஏதாவது ஒரு நபரிடம் என் கேள்வியின் அடிப்படையில் நீர் ஈடுபட்டிருக்க வழியுண்டு. யாராகிலும் ஒன்றை செய்து அதை குறித்து நீர் அவரிடம் விசாரித்திருந்தால், அந்த பாகத்திற்கு நான் வேதாகமத்தை திருப்பும்படி செய்யும். யாராவது ஒருவர் ஏதாவதொன்றைச் செய்து அது என்னுடன் சம்பந்தப்பட்டிருந்தால், நான் எங்கு தவறு செய்தேன் என்றோ, அல்லது நான் எதையாவது செய்ய வேண்டுமென்று விரும்பி நான் செய்யாமலிருந்தால், அதற்கு ஒத்த ஒரு நபரை நான் வேதாகமத்தில் காணும்படி செய்யும்” என்றேன். நான் கண்களை மூடி, வேதாகமத்தை திறந்து, என் விரல்களை ஒரு வேதவாக்கியத்தின் மேல் வைத்தேன். அது ஆதியாகமம் 24:7, ஆபிரகாமின் விசுவாசமுள்ள ஊழியக்காரனாகிய எலியேசர் - வேதத்தில் முன் மாதிரியான ஊழியக்காரன்- ஈசாக்குக்குப் பெண் தேட அனுப்பப்பட்டான் என்பதே அது . என் உடல் சிலிர்த்தது. நிச்சயமாக அது என்... அது என் செய்தியுடன் பொருந்துகிறது. மணவாட்டியை வெளியே இழுத்தல். ஆபிரகாம் எலியேசரிடம், “நீ இங்கிருந்து பெண் கொள்ளாமல் என் இனத்தாரிடம் போய் பெண் கொள்வாய் என்று எனக்கு ஆணையிட்டுக் கொடு'' என்றான். அவன், “அந்த பெண்ணுக்கு என்னுடன் வர மனதில்லாதிருந்தால்” என்று கேட்டான். அதற்குஆபிரகாம், “பெண் உன் பின்னே வர மனதில்லாதிருந்தாளேயாகில், நீ இந்த என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய். ஆனால் பரலோகத்தின் தேவன் தம்முடைய தூதனை உனக்கு முன்பாக அனுப்பி உன்னை வழி நடத்துவார்” என்றான். எலியேசர் போய் ஜெபம் செய்யத் தொடங்கினான். அவன் அழகிய ரெபேக்காளை சந்தித்தான். அவள் ஈசாக்கின் மணவாட்டியானான். அது பரிபூரணமான செய்தி: “வார்த்தைக்கு திரும்பிச் சென்று மணவாட்டியைக் கொண்டு வா” அது என் பணி. அதற்காகவே நான் இங்கிருக்கிறேன். அதைத் தான் நான் செய்ய முயன்று கொண்டிருக்கிறேன்-மணவாட்டியை வெளியே அழைக்க. 38 கலிபோர்னியாவில் மணவாட்டியின் முன்காட்சி (preview) உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? அந்த மணவாட்டி முதலில் வந்து, அணிவகுத்து கடந்து செல்வதை நான் கண்டேன். அதன் பின்பு குமாரி அமெரிக்கா, குமாரி ஆசியா, அவர்கள் எல்லோரும், ஓ, காண்பதற்கு மிக ஆபாசம்! பிறகு அதே மணவாட்டி மறுபடியும் கடந்து சென்றாள். அவர்களில் ஒன்று - இரண்டு பேர்- அடி தவறி அணியைவிட்டு வெளியே செல்வதைக் கண்டேன். அவர்களை மறுபடியும் அணிக்குள் கொண்டு வர முயன்றேன். அதைத் தான் நான் செய்ய வேண்டியவனாக இருக்கிறேன் -மணவாட்டி சரியாக அணிவகுத்து செல்லும்படி செய்தல்; அந்த மனிதனைத் தேடிக் கண்டு பிடித்தல். நான், “தேவனே, நான் வீடு திரும்பி என் பொருத்தனைகளைப் புதுப்பித்துக் கொண்டு, புதிதாக ஆரம்பிக்கப் போகிறேன்” என்றேன். அதைத் தான் நாங்கள் செய்யத் திட்டமிட்டுள்ளோம். அதற்காகவே நான் இங்கிருக்கிறேன். 39 இப்படி நாம் செய்தால் நலமாயிருக்கும். அடுத்த வாரம் பதினெட்டாம் தேதி தொடங்கினால், அடுத்த ஞாயிறு காலை, ஞாயிறு மாலை; அதற்கடுத்த ஞாயிறு, அதற்கும் அடுத்த ஞாயிறு. அது நல்லதென்று எத்தனை பேர் நினைக்கின்றீர்கள்? (சபையோர், 'ஆமென்' என்கின்றனர்- ஆசி). நன்றி. எனக்காக நீங்கள் ஒன்றை செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன். யாரிடமாவது நீங்கள் இருபத்தெட்டாம் தேதியன்று கூட்டம் இருக்குமென்று அறிவித்திருந்தால், அன்று நம்மால் கூட்டம் நடத்த இயலவில்லையென்று அவர்களுக்கு மீண்டும் அறிவிப்பீர்களா? அவர்களிடம் கூறுங்கள், அல்லது கடிதம் எழுதுங்கள், அல்லது வேறெதாவது விதத்தில் தெரியப்படுத்துங்கள். ஜனங்கள் வந்து ஏமாந்து திரும்பி செல்வதை நாம் விரும்பவில்லை. நமக்கு அரங்கம் கிடைக்கவில்லை. இம்முறை அது நமக்கு கிடைக்கவில்லை. கடந்தமுறை அங்கு நடந்த கூட்டத்தின்போது அநேகர் வந்திருந்தனர். அவர்கள்... பொது ஜனங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று உங்களுக்குத் தெரியும்... சரி, நாம் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அவ்வளவுதான். ஜனங்கள் வந்து பள்ளியைத் தொந்தரவு செய்வதாக அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் சீக்கிரமாகவே வந்து இதை, அதை, மற்றதை செய்ததாகவும் கூறுகின்றனர், அல்லது இடம் மக்களால் நெரிச்சலாகி விடுகின்றது, தீயணைப்பு படை அதிகாரி இதை, அதை கூறுகிறார், என்பது போன்று. சரி, உங்களுக்குத் தெரியும். அந்த கலசங்களையும் எக்காளங்களையும் சரியான இடத்தில் பொருத்துவோம். அப்படி செய்வேன் என்று நான் கூறினேன். அவை வேறொன்றின் கீழ் வருகின்றன- கலசங்கள் ஊற்றப்படுதலும், எக்காளங்கன் ஊதப்படுதலும். நாம் அவையனைத்தையுமே ஒன்றாக எடுத்து, அவைகளை ஒன்றாக இணைப்போம். 40 சகோ. வேயில் எனக்காக இலக்கணப்படுத்தி மறுபடியும் எழுதியுள்ள அதை எத்தனை பேர் படித்திருக்கிறீர்கள்? அவைகளில் ஏதாவதொன்றை படித்திருக்கிறீர்களா? உங்களில் இரண்டு, மூன்று பேர் படித்திருக்கிறீர்கள். சகோதரன். வேயில், நீங்கள் சிறப்பாக அதை செய்திருக்கிறீர்கள். சகோதரி வேயில் அதை செய்தார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் அதை செய்தார்கள். நீங்கள் அதை அப்படியே எழுதினீர்கள். நான் எப்பொழுமே பெண்களுக்கு விரோதமாயில்லை. அப்படித்தானே, சகோதரி வேயில்? இப்பொழுது அடுத்த பதினைந்து, இருபது நிமிடங்கள், ஒரு வேத பாகத்தைப் படிப்போம். என்னிடம் ஒருசிறு புத்தகம் உள்ளது. அது சகோ. வேயிலினுடையது. அல்லது யாருடையது? ராய் பார்டர்ஸுடையது என்று நினைக்கிறேன். சகோ. வேயில் அந்த புத்தகத்தை எனக்கு வாங்கித் தந்தார். நான் ஒரு சிறு பாட புத்தகம் செய்ய விரும்புகிறேன். 41 நான் எழுதி வைக்கும் பிரசங்கக் குறிப்பை நீங்கள் யாராகிலும் காண நேர்ந்தால் உதாரணமாக விடிவெள்ளி நட்சத்திரத்தைக் குறித்து நான் பேசவேண்டுமானால், ஒரு நட்சத்திரத்தை நான் வரைந்து வைத்திருப்பேன். வேறெதாவதைக் குறித்து நான் பிரசங்கிக்க வேண்டுமானால்... நான் எல்லாவற்றையும் படமாக வரைந்திருப்பேன். எல்லாமே கிறுக்கியிருக்கும். யாருக்குமே அது புரியாது. சில நேரங்களில் நான் காரில் சென்று கொண்டிருக்கும் போது, ஏதாவதொன்று என் நினைவுக்கு வந்தால், கார் மேலும் கீழும் குதித்துக் கொண்டிருக்கும் போது அதைகுறித்து வைப்பேன், சிறு சிறு படங்களாக- சிலுவை, பாலங்கள் போன்று. உதாரணமாக நான் நட்சத்திரம் இறங்கி வருவதைக் குறித்து பிரசங்கிக்க எண்ணினால், நான் கூர்நுனிக் கோபுரம் அதன் மேல் இறங்கி வருவதைப் போல் வரைந்து வைப்பேன். அது வேதத்தில் எங்குள்ளது என்று எனக்குத் தெரியும். மோசே புரிந்த ஒரு குறிப்பிட்ட செயலை சித்தரிக்க வான்கோழி கிறுக்குவது போல் கிறுக்கி வைப்பேன். அப்படிப்பட்டவை அநேகம் இங்கு வரையப்பட்டுள்ளன. இன்று காலை அந்த குறிப்புகளில் ஒன்றின் பேரில் சில நிமிடங்கள் பேசலாம் என்று எண்ணுகிறேன். அது இருபது நிமிடங்கள் பிடிக்கும். 42 இன்றிரவு சகோ, நெவிலின் ஆராதனையை நான் எடுத்துக் கொள்ளமாட்டேன். நான் இளைப்பாறி, அவருடைய பிரசங்கத்தை கேட்கப் போகிறேன். பிறகு கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த ஞாயிறு காலையன்று நாம் ஆராதனையைத் தொடங்கலாம். நீங்கள் அனைவரும் எனக்குதவி செய்யுங்கள். நாம் ஜெபம் செய்வோம். ஏனெனில் என் இருதயத்தில்... அவர்கள், “நாம் லூயிவில்லுக்கு செல்லலாம், அல்லது நியூ ஆல்பனிக்கு செல்லலாம்'' என்றனர். ஆனால் இந்த கூட்டமோ ஜெபர்ஸன்வில்லுக்கென்று பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டது. நான் லூயிவில்லுக்கும், நியூ ஆல்பனிக்கும் வேறு நேரங்களில் செல்வேன். ஆனால் இக்கூட்டமோ ஜெபர்ஸன்வில்லில் நடைபெற வேண்டுமென்று எத்தனிக்கப்பட்டுள்ளது. 43 இப்பொழுது நாம் ஒரு நிமிடம் தலைவணங்குவோம்... உங்களிடம் நான் ஏறக்குறைய முப்பது நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தேன். இப்பொழுது நாம் அவருடன் சிறிது நேரம் பேசுவோம். கர்த்தராகிய இயேசுவே, நாங்கள் நிச்சயமாகவே எங்கள் நினைவுகளுக்கும் அறிவுக்கும் மேலாக ஆசீர்வதிக்கப்பட்ட ஜனங்கள், எங்கள் மத்தியில் மேன்மை தங்கியவர் யாராகிலும் இருந்தால் - வெளிநாட்டு தூதர் போன்றவர்கள் யாராகிலும் இருந்தால் அதை நாங்கள் மேன்மையாகக் கருதுவோம். ஆனால் இன்று பரலோகத்தின் தேவன் எங்கள் மத்தியில் மாத்திரமல்ல, எங்களுக்குள்ளும் வாசம் செய்து, அவருடைய வாழ்க்கையை எங்கள் மூலம் வாழ்கிறார். கர்த்தாவே, இதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இது நிச்சயமாக எங்கள் அறிவுக்கெட்டாத செயல். ஆண்டவரே, ஆராதனைகளைக் குறித்தும், ஆப்பிரிக்காவைக் குறித்தும், இந்தியானாவிலே இந்த சில நாட்களுக்காக நாங்கள் ஒழுங்கு செய்ய முயன்ற ஆராதனைகளைக் குறித்தும் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். எப்படியோ ஆண்டவரே, அந்த தரிசனம் நிறைவேறுவதற்காக எங்களை கூடாரத்துக்கு விரட்டுபவர் நீராக இருக்கக்கூடும். உமது சித்தம் செய்யப்படுவதாக. எங்கள் அறிவுக்கு எட்டும் வரைக்கும், இதை இவ்விதம் நாங்கள் சமர்ப்பிக்கிறோம். உமது சித்தத்துக்கு முரணாக ஏதாகிலும் இருக்குமானால், ஆண்டவரே, அதை எங்களுக்குத் தெரியப்படுத்தும்படிக்கு வேண்டிக் கொள்கிறோம். உமது பரிபூரண சித்தத்தை செய்ய நாங்கள் அறிந்து கொள்வோமாக. அடுத்த சிலநிமிடங்களுக்கு எங்களை ஆசீர்வதியும், கர்த்தாவே, உமது வசனத்தின் மூலம் எங்களுடன் பேசும், உமது வசனமே சத்தியம். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். வேதாகமத்தில் மாற்கு 8-ஆம் அதிகாரத்திற்கு திருப்புவோமாக. அது.. 44 வழக்கமாக எத்தனை மணிக்கு நீங்கள் வெளியே அனுப்பப்படுவீர்கள்? பன்னிரெண்டு மணிக்கா? நல்லது, அங்கு நடந்தவைகளை சாட்சியாக அறிவித்த பின்பு, வார்த்தையைக் குறித்த ஒரு சிறு செய்தியை உங்களுக்களிக்க விரும்புகிறேன். மாற்கு 8-ம் அதிகாரம் 34-ம் வசனத்திலிருந்து... 38-ம் வசனம் முடிய, அந்த அதிகாரம் முழுவதையும் வாசிப்போம். அவர் கூறினதை நான் வாசிக்க விரும்புகிறேன். ஏனெனில் அது சத்தியமென்று அறிவேன். பின்பு அவர் ஐனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான், என்னிமித்தமாகவும், கவிசேஷத்தினிமித்தமாகவும், தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக் கொள்ளுவான். மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? ஆதலால் விபசாரமும் பாவமுள்ள இந்த சந்ததியில் என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக் குறித்து மனுஷகுமாரனும் தமது பிதாவின் மகிமை பொருந்தினவராய்ப் பரிசுத்த தூதர்களோடுங்கூட வரும்போது வெட்கப்படுவார் என்றார். மாற்கு8:3438. 45 இதிலிருந்து 'வெட்கப்படுதல்' என்னும் சிறு பொருளைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்- அதை அவ்வாறு அழைக்கலாமென்றால், அது எனக்குப் பிரியம். “என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக் குறித்து நானும் வெட்கப்படுவேன்.” “வெட்கப்படுதல்” என்னும் சொல், 'தர்ம சங்கடமான நிலையையடைதல்' (embarrassed) என்றும் பொருள்படும். ஏதாவது ஒன்றைக் குறித்து நீங்கள்... நீங்கள் தர்மசங்கடமான நிலையையடைதல், அதைக் குறித்து வெட்கப்படுதல். நீங்கள் ஒன்றைக் குறித்து வெட்கப்படுகிறீர்கள் என்னும் போது, நீங்கள் எதைப் பேசுகின்றீர்களோ அதைக் குறித்து நிச்சயமற்றவர்களாய் இருக்கின்றீர்கள் என்று அர்த்தமாகிறது. அதைக் குறித்து நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் என்னும் உறுதியை நீங்கள் உடையவர்களாயிருந்தால், அதை எவரிடமும் கூற நீங்கள் வெட்கப்படுவதில்லை. நீங்கள் தயங்கும் போது, நீங்கள் நிச்சயமற்றவர்களாயிருக்கின்றீர்கள் என்பதை அது காண்பிக்கின்றது. 46 இப்பொழுது நான் பேசிக் கொண்டிருக்கும் “வார்த்தையைக் குறித்து வெட்கப்படுதல்” என்பது இன்று அதிகமாக நிலவி வருகின்றது. அவரும் வார்த்தையும் ஒன்றே. “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி... நமக்குள்ளே வாசம்பண்ணினார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்!” எனவே, “என்னைக் குறித்தும் என் வார்த்தையைக் குறித்தும் எவன் வெட்கப்படுவானோ” அவரும் வார்த்தையும் ஒன்றே. எனவே பாவமுள்ள இந்த சந்ததியில் அவர் வார்த்தையைக் குறித்து எவன் வெட்கப்படுகிறானோ, “அவனைக் குறித்து நானும் வெட்கப்படுவேன்!” 47 இன்று யாராகிலும் ஒருவர், “நீ கிறிஸ்தவனா?'' என்று கேட்டால், அவன், ”ஓ, நான் கிறிஸ்தவன்'' என்று கூறுவதைக் காண்கிறோம். அது மிகவும் பிரபலமான ஒரு செயல். பாருங்கள்? ஆனால், ''இந்த அடையாளங்கள் விசுவாசிக்கிறவர்களைத் தொடரும்“ என்னும் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டுப் பாருங்கள். “ஓ”, போதகர்களின் முகங்கள் கூட சிவந்துவிடும். பாருங்கள்? ''தெய்வீக சுகமளித்தலைக் குறித்து நீ வெட்கப்படுகிறாயா? முழு சுவிசேஷத்தைக் குறித்து நீ வெட்கப்படுகிறயா? உன்னுடைய பெந்தெகொஸ்தே அனுபவத்தைக் குறித்து நீ வெட்கப்படுகிறாயா?“ அது அவருடைய வார்த்தையைக் குறித்து வெட்கப்படுதல். அது அவருடைய வார்த்தை உன்னில் மாம்சமாதல். 48 எனவே அவருடைய வார்த்தை ஒவ்வொரு சந்ததியிலும் வாழ்ந்து முடிக்க வேண்டியதாயுள்ளது. மோசேயின் நாட்களில் அது வாழ்ந்தது. அந்த நாட்களில், வேதம் எபிரெயர் 1-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது போல், “தேவன் பங்கு பங்காகவும் வகை வகையாகவும் தீர்க்கதரிசிகளின் மூலமாய் திருவுளம்பற்றினார்”. அந்த தீர்க்கதரிசிகள் சபையானது எல்லாமே சத்தியத்தை திரித்து... அந்த தீர்க்கதரிசிகள் தீரமுள்ள தேவனுடைய செய்தியாளர்களாக, சபை சார்பு, ஸ்தாபனம் போன்றவை எதுவுமின்றி அங்கு தோன்றி, ராஜாக்களையும், ராஜ்யங்களையும், சபைகளையும் எதிர்த்தனர். அவர்கள் ஆசாரியர்களின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டபோது, வெட்கப்படவேயில்லை. ஏனெனில் “கர்த்தர் உரைக்கிறதாவது” என்பதை அவர்கள் நேரடியாகப் பெற்றிருந்தனர். நீங்கள் கவனிப்பீர்களானால், தீர்க்கதரிசி ஒரு விதத்தில் பழைய ஏற்பாட்டில் அவன் “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று கூறும்போது அவனைக் கவனியுங்கள். அப்பொழுது அவன் தேவனுடைய ஸ்தானத்தையே வகிக்கும் கட்டத்துக்குள் நுழைந்துவிடுகிறான். நீங்கள் கவனிப்பீர்களானால், அவனுக்கு முன்பாக “கர்த்தர் உரைக்கிறதாவது” என்பதை அவன் வைத்தபோது, அவன் தேவனுக்குள் சென்று, தேவனுடைய பாகத்தை ஏற்று நடித்தான். அது தேவன் அவன் மூலம் பேசுவதாகும். “கர்த்தர் உரைக்கிறதாவது”. 49 நான் முற்காலத்து தீர்க்கதரிசிகளை நினைவு கூருகிறேன். அவர்கள் அந்த செய்தியுடன் வந்தபோது, அது ராஜாக்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது. அது ஜனங்களை அசெளகரிய நிலைக்குக் கொண்டு வந்தது. ஆசாரியர்களும் கூட அசெளகரிய நிலையையடைந்தனர். ஏனெனில் அவர்கள் தலைவர்களாக, பக்தியுள்ளவர்களாக இருக்க வேண்டியவர்கள்... வார்த்தை அவ்விதம் வந்தபோது, அது அவர்களை அம்பலமாக்கியது. அவர்கள் தர்மசங்கடமான நிலையையடைந்தனர், அவர்கள் வெட்கப்பட்டனர். அநேக முறை அதை நாம் இன்று காண்கிறோம் - அநேக முறையல்ல, அடிக்கடி காண்கிறோம். ஒரு மனிதன், ''நான் கிறிஸ்தவன்“ என்கிறான். “நீ விசுவாசித்த பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டாயா?” “ஓ, ஊ, ” பாருங்கள், அதைக் குறித்து அவர்கள் தர்ம சங்கடமான நிலையையடைகின்றனர். “அங்கு கூச்சலிட்டு, தெய்வீக சுகமளித்தலில் நம்பிக்கை கொண்டிருக்கும் அந்த கூட்டத்தை நீ சேர்ந்தவனா?” என்று யாராகிலும் கேட்கின்றனர். அநேக முறை கிறிஸ்தவர்கள் பின்வாங்கிப் போகின்றனர். அவர்கள் ஒரு ஸ்தாபனத்தை சேர்ந்தவர்களாயிருந்தால், “நான் பாப்டிஸ்டு, நான் பிரிஸ்பிடேரியன், நான் லூத்தரன்” என்று அறிவிக்க விரும்புகின்றனர். அதைக் குறித்து அவர்கள் வெட்கப்படுவதில்லை. 50 ஆனால் தேவனுடைய வார்த்தையை அது உள்ளபடியே ஏற்றுக் கொள்ளும் கிறிஸ்தவனாயிருப்பதற்கு அவர்கள் வெட்கப்படுகின்றனர். “நான் எந்த ஸ்தாபனத்தையும் சேர்ந்திருக்கவில்லை ” என்று கூற அவர்கள் வெட்கப்படுகின்றனர். அவர்கள் உலகிலுள்ள மற்றவர்களைப் போலவே ஏதாவதொரு ஸ்தாபனத்தை சேர்ந்திருக்க வேண்டுமென்று எண்ணுகின்றனர். அண்மையில் தான் இத்தகைய மனப்பான்மை காணப்படுகின்றது. லூத்தரின் நாட்களில், லூத்தரைப் பின்பற்றும் லூத்தரன் என்று ஒருவன் தன்னை அழைத்துக் கொண்டால், கத்தோலிக்க சபை அவனைக் கொன்று போடும். வெஸ்லியின் நாட்களில், நீ ஆங்கலிகன் சபையை எதிர்த்த மெதோடிஸ்டு என்று அறிவிப்பாயானால், ஆங்கிலிகன் சபை உனக்கு மரண தண்டனை விதித்திருக்கும். பெந்தெகொஸ்தேயினரின் நாட்களில், நீ பெந்தெகொஸ்தேயினன் என்று சொல்லிக் கொள்வது வெட்கத்துக்குரிய செயல். ஏனெனில் நீ உடனடியாக உருளும் பரிசுத்தன் என்றும், அந்நிய பாஷை பேசுபவன் என்றும் ஏளனமாகக் கருதப்படுவாய், இப்பொழுதோ அவர்கள் மற்ற கூட்டத்தினரைப் போலவே ஸ்தாபனம் ஏற்படுத்திக் கொண்டனர். 51 இப்பொழுது வெளியே அழைக்கப்படும் நேரம் வரும் போது, நீ எந்த ஸ்தாபனத்தையும் சேர்ந்திருக்க முடியாது, ''நான் பெந்தெகொஸ்தேயினன்“ என்றும், ”நான் பிரிஸ்பிடேரியன், லூத்தரன்“ என்றும் பெருமையாகக் கூறிக் கொள்ளலாம். ஆனால் நீ அதனின்று வெளியே வந்து வார்த்தைக்காக நிற்கும் நேரம் வரும்போது, ''நான் எந்த ஒரு ஸ்தாபனத்தையும் சேர்ந்தவனல்ல'' என்று கூற வேண்டியவனாயிருக்கிறாய், அது தர்மசங்கடமான நிலைமை. இயேசு, ''என்னைக் குறித்து நீ வெட்கப்பட்டால், உன்னைக் குறித்து நான் வெட்கப்படுவேன்“ என்றார். அவர் ஏன் உன்னைக் குறித்து வெட்கப்பட வேண்டும்? ஏனெனில் நீ அவருடையவன் என்று உரிமை பாராட்டிக் கொண்டு, அதே சமயத்தில் அவரைப் பின்பற்ற மறுக்கிறாய். நான், ''இச்சிறுவன் என் மகன்“ என்று கூறுகிறேன் என்று வைத்துக் கொள்வோம். அவன் திரும்பி, “நான் உங்கள் மகனா? நான் யாரென்று நினைக்கிறீர்கள்?” என்று என்னை கேட்பானானால், அது என்னைத் தர்மசங்கடமான நிலையில் ஆழ்த்திவிடும். என் மகனும் அந்நிலயையடைகிறான். இன்றைக்கு கிறிஸ்தவ மார்க்கம் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் மார்க்கமும் இந்நிலையில்தான் உள்ளது. அதற்கு ஒரு ஸ்தாபனத்தின் பெயரைச் சூட்டினால், அவர்கள் ஸ்தாபனத்தின் பிதாத்துவத்தை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் தேவனுடைய வார்த்தையாகிய இயேசுவின் பிதாத்துவத்தை ஏற்றுக் கொள்ளவேண்டுமெனும் நிலை வரும்போது, அவர்கள் தர்மசங்கடமான நிலையையடைகின்றனர். அவர்கள், ''ஆம், நான் அந்நிய பாஷை பேசினேன்; ஆம், நான் தரிசனங்களைக் கண்டேன். ஆம், தெய்வீக சுகமளித்தலில் எனக்கு விசுவாசம் உண்டு. ஆம், கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நான் எல்லா ஸ்தாபனங்களினின்றும் நீங்கலாகியிருக்கிறேன். அவைகளில் ஒன்றுக்கும் நான் தலைவணங்குவதில்லை. நான் கிறிஸ்துவின் பணிவிடைக்காரன்'' ஓ, அது அவர்களை சின்னாபின்னமாக்கிவிடும். 52 அன்றொரு இரவு ஒரு மகத்தான பிரசங்கியார் சிக்காகோவிலுள்ள முழு சுவிசேஷ வர்த்தகர் குழுவுக்கு வந்திருந்தார். இதை கூற இங்கு நான் ஒரு நிமிடம் நிறுத்த விரும்புகிறேன். அநேகமுறை நீங்கள் நினைக்கிறீர்கள்- நானும்கூட- நாம் உரைக்கும் வேதாகமத்தின் சத்தியம் ஜனங்களை எட்டுவதில்லை என்று. ஆனால் அது எட்டுகிறது. சில நேரங்களில் அவர்கள் அதற்கு விரோதமாக தலையையுயர்த்துகின்றனர். ஆனால் வேண்டுமென்று அவர்கள் அப்படி செய்வதில்லை. நீங்கள் எந்நிலையில் இருக்கின்றீர்கள் என்று அறிந்து கொள்ள அவர்கள் முயல்கின்றனர். 53 ஒரு குடிகார கூட்டம், கிறிஸ்தவ மார்க்கம் என்று ஒன்றில்லை என்று தங்களுக்குள்ளே தர்க்கம் செய்ததாக ஒரு கதையுண்டு. அவர்களில் ஒருவன், “அது எங்கிருக்கிறது என்று எனக்குத் தெரியும், என் மனைவியிடம்'' என்றானாம். மற்றவன், “எனக்கு நம்பிக்கையில்லை” என்றான். அவன், “சரி வாருங்கள், நாம் குடித்ததைப் போல் நடித்து என்ன நேரிடுகிறதென்று பார்க்கலாம்” என்றான். அவர்கள் அனைவரும் அவன் வீட்டிற்கு சென்று அட்டகாசம் செய்தனர். அவன் மனைவியிடம் முட்டைகளை சமையல் செய்யக் கூறினான். அதன் பின்பு அவைகளைத் தரையில் எறிந்து, “முட்டைகளை சமையல் செய்யக் கூட தெரியவில்லையே'' என்று அதட்டினான். இப்படியாக அவர்கள் அடுத்த அறையில் நாற்காலிகளிலிருந்து கீழே விழுந்து அட்டகாசம் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது பதிலுக்கு ஒரு வார்த்தையும் கூறாமல் தரையை பெருக்கிக்கொண்டிருக்கும் சத்தத்தை அவர்கள் கேட்டனர். அவள் ஒரு சிறு பாடலை தனக்குள்ளே பாடிக் கொண்டிருந்தாள். %இயேசு தனியாகச் சிலுவையைச் சுமந்து %முழு உலகமும் சும்மாஇருக்க வேண்டுமா? ஒவ்வொருவருக்கும் ஒரு சிலுவையுண்டு %எனக்கும் ஒருசிலுவையுண்டு %மரணம் என்னை விடுவிக்கும் மட்டும் %பிரதிஷ்டை செய்யப்பட்ட இச்சிலுவையை சுமப்பேன் %பின்பு கிரீடம் தரிக்க வீடு செல்வேன்.... அப்பொழுது அந்த வயோதிப குடிகாரன் மற்றவர்களிடம், “அவள் கிறிஸ்தவள் என்று நான் சொன்னது சரியா?” என்று கேட்டான், பாருங்கள், அவர்கள் அவளைச் சோதித்துப் பார்த்தனர். சில நேரங்களில் உலகம் உங்களை சோதிக்க முனைகிறது என்பதை நான் கண்டிருக்கிறேன். 54 இப்படி நிகழுமென்று நான் நினைக்கவேயில்லை. சென்ற சனி இரவு - ஞாயிறு இரவு என்று நினைக்கிறேன். அந்த பெரிய பிரசங்கியார்... நான் அவர் பெயரைக் கூறப் போவதில்லை. அவர் முரணாகப் பிரசங்கிக்கத் தொடங்கினார். நான் சபைகளை உலக சபைகள் ஆலோசனை சங்கத்தில் சேராதபடி தடுக்க முயன்று வருகிறேன். ஆனால் இவரோ அதில் சேரும்படி தூண்டுகிறார். அவர் அன்று முழு சுவிசேஷ வர்த்தகர் குழுவில் பேசினார். நான் தான் அன்று சிக்காகோவில் பேச வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்பொழுது நான் ஆப்பிரிக்காவில் இருப்பேன் என்று எண்ணினதால், அந்த கூட்டத்தில் பேச நான் ஒப்புக் கொள்ளவில்லை. அந்த மனிதன் எழுந்து நின்று, “தற்பொழுது உலகில் நேரிடும் மிகப் பெரிய அசைவு என்னவெனில், எல்லா சபைகளும் கத்தோலிக்க சபைக்குத் திரும்பி எக்யூமனிசம் அசைவில் ஒன்றாக இணைகின்றன. கத்தோலிக்கர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வார்கள்” என்றார். என்னே ஒரு பிசாசின் கண்ணி 55 அப்பொழுது சர்வதேச வர்த்தகர்களின் தலைவரான சகோ. ஷகரியான், அந்த மனிதன் பேசி முடிந்தவுடன் எழுந்து நின்று, “நாங்கள் கேள்விப்பட்டது அப்படியல்ல. இந்த எக்யூமினக்கல் அசைவு அவர்களை மிருகத்தின் முத்திரைக்கு அழைத்துச் செல்லும் என்று சகோ, பிரன்ஹாம் எங்களிடம் கூறியுள்ளார். அவர் கூறினது உண்மையென்று நாங்கள் விசுவாசிக்க முற்படுகிறோம்” என்றார். சகோ. ஷகரியான் தொடர்ந்து, “உங்களில் எத்தனை பேர் சகோ. பிரன்ஹாம் இங்கு வந்து உண்மையை விளக்க விரும்புகிறீர்கள்? கையுயர்த்துங்கள்” என்றார். அப்பொழுது ஏறக்குறைய ஐயாயிரம் கரங்கள் உயர்த்தப்பட்டன. நான் ஒருநாள் வரவேண்டுமென்று எல்லோரும் கூச்சலிட்டனர். 56 சகோ. கார்ல் வில்லியம்ஸ் தொலைபேசியில், “சகோ. பிரன்ஹாம், அந்த கூட்டத்தின் மத்தியில் நான் சென்றபோது உங்களுக்கு விமானப்பயணச் சீட்டு வாங்குவதற்காக, அவர்கள் கத்தை கத்தையாக நூறு டாலர் நோட்டுகளை என் கைகளில் திணித்தனர்” என்றார். பாருங்கள், ஒரு நாளுக்காக மாத்திரம். அந்த ஜனங்களைப் பாருங்கள். அவர்களுக்குள்ளே வார்த்தை பதிந்துள்ளது. சில நேரங்களில் அதை நாம் அறியாமலிருக்கிறோம். பாருங்கள்? நீங்கள் உண்மையாக... உலகம் அதற்கு எவ்வளவாக விரோதமாய் இருந்தாலும் ஸ்தாபனங்கள் அதற்கு எவ்வளவாக விரோதமாய் இருந்தாலும், அது உண்மையென்று தேவன் நிரூபித்து வருகிறார். முடிவில் அந்த மகத்தான நேரம் வரும்போது, நாம் நினையாத விதத்தில் காரியங்கள் நிகழும். 57 ஆம், நீங்கள் தர்மசங்கடமான நிலையையடைந்தால், அதைக் குறித்து நீங்கள் நிச்சயமற்றவர்களாய் இருக்கின்றீர்கள் என்பதை அது காண்பிக்கின்றது. அப்படியானால் அதை விவாதிக்காமல் இருப்பதே நல்லது. அதைக் குறித்து நீங்கள் வெட்கப்படுவீர்களானால், அதை விவாதிக்க நீங்கள் விரும்பமாட்டீர்கள். பரிசுத்த ஆவியினால் நிறைந்த ஒரு மனிதன்; தேவனுடைய வல்லமையினால் நிறைந்து தேவனுடைய அன்பை தன் இருதயத்தில் கொண்டுள்ள மனிதன், வேறொருவனிடம் சில நிமிடங்கள் பேச நேர்ந்தால், தன் இருதயத்திலுள்ள அன்பை அவனுக்கு எடுத்துரைக்காமல் எப்படி சும்மா இருக்க முடியும்? பாருங்கள், ஏதோ ஒன்று அவனுக்கு நேர்ந்துள்ளது. அவன் சும்மா இருக்க முடியாது. இயேசு குறிப்பிட்ட பொல்லாத நாட்கள் இவைகளே. ஜனங்கள் வார்த்தையைக் குறித்தும் அவர்களுக்குள் கிரியை செய்து கொண்டிருக்கும் தேவனுடைய ஆவியைக் குறித்தும் வெட்கப்படுகின்றனர். ஆனால் சத்தியமானது ஜனங்களுக்கு வெளிப்படையாக ஆகும் போது, அது தேவனே தம்மை வார்த்தையின் மூலம் வெளிப்படுத்துவதாகும். 58 எந்த ஒரு மனிதனும் எந்த விதமான உரிமையும் பாராட்டக் கூடும். இந்நாட்களில் இத்தகைய பயங்கரமான உரிமை பாராட்டல்களை நாம் கேட்டு வருகிறோம், ஆனால் பாருங்கள், அதில் சத்தியம் இருக்குமாயின், அது வார்த்யிைன் மூலமாகவே இருக்கவேண்டும். ஜனங்களின் மத்தியில் எண்ணெய் வழிந்தோடியதாகவும், அவர்கள் கைகளிலிருந்து இரத்தம் வழிந்தோடியதாகவும், பெண்களின் முதுகில் இருந்து இரத்தம் தோன்றி அவர்கள் காலணிகள் வரைக்கும் வழிந்தோடியதாகவும், அவர்கள் காலணிகளை கழற்றி அதிலிருந்த எண்ணெயை தரையில் ஊற்றியதாகவும், தவளைகள் தோன்றி மேடையிலிருந்து கீழே குதித்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் வேதத்தில் இப்படிப்பட்டவை கூறப்படவில்லை. இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களும் அளிக்கப்படவில்லை. வேதம் ஒன்று மாத்திரம் கூறுகின்றது. அதாவது, “கடைசி நாட்களில், கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் வஞ்சிக்கப்படத்தக்கதாக, இந்த ஆவி மிக அருகாமையில் இருக்கும்''. 59 ஆனால் உண்மையான, தேவனால் உறுதிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தைக்கு வரும்போது, இதற்கு விரோதமாயுள்ள சாராரை அது தர்மசங்கடத்தில் ஆழ்த்துகின்றது. அதை குறித்து அவர்கள் தர்மசங்கடம் அடைகின்றனர். ஆனால் உத்தம கிறிஸ்தவனாயுள்ள எந்த மனிதனுக்கும், ஸ்திரீக்கும், பையனுக்கும், பெண்ணுக்கும் அது தத்ரூபமாயுள்ளது. தேவன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து வாக்குத்தத்தத்தை அளித்துள்ளார். அதை நீங்கள் பெற்றுக் கொள்ளும் போது, உங்களுக்குள் ஒன்று வாசம் செய்கிறது. அதன் இடத்தை வேறெதுவும் எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு மனிதன் தேவனை சந்திக்கும் போது- உணர்ச்சிவசப்பட்ட காரணத்தினாலோ, அல்லது ஏதோ ஒருவகை உற்சாக மிகுதியினாலோ, அல்லது மதப்போதகம், ஸ்தாபனப் பாடம் அல்லது தன்னை ஆறுதல்படுத்திக் கொள்ள அவன் ஏற்றுக்கொண்ட கோட்பாடுகளின் மூலமாகவோ அல்ல. ஆனால் மோசே செய்தது போல் உண்மையாக அவன் வனாந்திரத்துக்கு வந்து, சர்வ வல்லமையுள்ள தேவனை முகமுகமாய் சந்தித்து, அந்த சத்தம் அவனுடன் பேசி, அது தேவனுடைய வார்த்தையுடனும், இந்நேரத்துக்குரிய வாக்குத்தத்தத்துடனும் பிழையின்றி இணையுமானால், அது உங்களில் ஏதோ ஒன்றை செய்கிறது, நீங்கள் அதைக் குறித்து வெட்கப்படுவதில்லை. அடுத்த பதினைந்து நிமிடங்களுக்கு இதை பார்ப்போம். 60 சிலர் அத்தகைய அனுபவத்தைப் பெறுகின்றனர். இன்று நான் உங்களிடம் ஒரு சபையாகவோ அல்லது ஸ்தாபனமாகவோ பேசாமல், ஒரு தனிப்பட்ட நபர் என்னும் முறையில் பேசுகின்றேன். நீங்கள் இந்த கூடாரத்துக்கு வருகிறீர்கள் என்பதனால் அல்ல. நான் உங்களை நேசிப்பதனாலும், நீங்கள் என்னை நேசிப்பதனாலும், இதை நான் கூற முற்படுகிறேன்- வேறெந்த காரணத்தினாலும் அல்ல. நான் மரிக்க வேண்டியவன் என்னும் முறையில் உங்களுடன் பேசுகின்றேன். என்றாவது ஒருநாள் இவ்வாழ்க்கையின் முடிவுக்கு நான் வரவேண்டியவனாயிருக்கிறேன். ஒருக்கால் நான் அங்கிருக்கமாட்டேன், வேறொரு போதகரும் ஒருக்கால் அங்கிருக்கமாட்டார். ஆனால் உங்களை அங்கு சந்திக்கக் கூடியவர் ஒருவர் மாத்திரமே. அவர் தான் தேவன். இதை கவனியுங்கள். ''என் மனைவி நல்ல கிறிஸ்தவள்,“ ”என் கணவர் நல்ல கிறிஸ்தவர்“ என்றல்ல,”நான் தேவனுடன் சரியாயிருக்கிறேனா?'' என்பது தான் முக்கியம். ''என் போதகர் தேவனை சந்தித்திருக்கிறார்“ என்றல்ல. ”நான் அவரை சந்தித்திருக்கிறேனா?“ ”நான் கூச்சலிட்டேன், நான் அந்நிய பாஷை பேசினேன்“ என்பதனால்ல அல்ல. ''நான் அவரை ஒரு நபராக சந்தித்தேன்” என்பதனால் தான். அப்படியானால் அதைக் குறித்து நீங்கள் வெட்கப்படவே மாட்டீர்கள். ஏதோ ஒன்று பிழையின்றியும், பரிசுத்தமாகவும், உண்மையாகவும்... உள்ளது. 61 தேவனை போல் பாவனை செய்யும் ஒரு ஆவியை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதை அதை மற்றதை செய்யும் ஒரு ஆவியை நீங்கள் சந்திக்க நேரிடும். அதை சற்று பின் தொடர்ந்து சென்று, அது தேவனுடைய வார்த்தையுடன் எப்படி ஒப்பிடுகிறது என்பதை கவனியுங்கள். நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள் என்று உங்களிடம் கூறும் ஒரு ஆவியை நீங்கள் சந்திக்க நேரிடும். உங்களுக்கு அது ஒரு மகிமையான உணர்வைக் கொடுக்கக் கூடும். நீங்கள் சத்தமிட்டு கூச்சலிடலாம். ஆனால் அது வார்த்தையை மறுதலிக்குமானால், வார்த்தையை எழுதின அதே பரிசுத்த ஆவி எப்படி தம்முடைய சொந்த வார்த்தையை மறுதலிக்க முடியும்? அந்த ஆவி தேவனுடைய வாக்குத்தத்தம் ஒவ்வொன்றுக்கும் “ஆமென்” என்று கூறி ஆமோதிக்க வேண்டும். அப்படி அது செய்யாவிட்டால், நீங்கள் தேவனை சந்திக்கவேயில்லை என்று அர்த்தமாகிறது. அது வஞ்சிக்கும் ஆவி. இன்று உலகம் அப்படிப்பட்ட ஆவியால் நிறைந்துள்ளது. தேவன் இறங்கி வந்து, அவர் ஒரு குறிப்பிட்ட செயலை செய்யப் போவதாக அறிவித்துவிட்டு, ஒவ்வொரு முறையும் திரும்பி வந்து அதை செய்வதை நீங்கள் காண்கையில், அப்படியானால் நீங்கள் உண்மையான தேவனுடைய ஆவியைக் கொண்டிருக்கிறீர்கள் என்பதேயாகும். வேதாகமத்தை எழுதிய பரிசுத்த ஆவி ஒரு மனிதனின் மேல் இருந்து கொண்டு, அதே சமயத்தில் அதை மறுதலித்து, “அது சரியல்ல, அது வேறொரு நாளுக்குரியது” என்று எப்படி கூற முடியும்? அவர், “வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது” என்றார். அது அப் 2:38 . ஒரு ஆவி எப்படி அதைக் காட்டிலும் வித்தியாசமான ஒன்றை ஏற்றுக்கொண்டு, அதே சமயத்தில் அது தேவனுடையதாய் இருக்கமுடியும்? எபி. 13:8, “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார்” என்று கூறியுள்ளதே! 62 யாராகிலும், 'ஓ, அவர் தத்துவஞானி என்று நம்புகிறேன். அவர் நல்லவர், அவர் தீர்க்கதரிசி. ஆனால் அவருடைய வல்லமையைக் குறித்து...“ என்று கூறினால் அன்றொரு இரவு நான் ஜார்ஜ் ஸ்மித்துடன் பேசிக் கொண்டிருந்தேன். அந்த பையன் தான் என் மகள் ரெபேக்காளுடன் சென்று கொண்டிருக்கிறான். அவன் அருமையான பையன். அவன் இந்த கூடாரத்தில் பாடியிருக்கிறான். அவன் பாப்டிஸ்டு பையன். “என் பெயரை அதிலிருந்து நீக்கி விடுங்கள். அதனுடன் நான் எவ்வித தொடர்பும் கொள்ள பிரியப்படவில்லை'' என்றான் அவன். அங்கு ஒரு வாலிப ஸ்திரீ இருந்தான்... மலையின் மேலுள்ள அந்த பாப்டிஸ்டு சபையில் அவர்கள் கூட்டம் ஒன்றை நடத்தினர். அங்கிருந்த எல்லோருமே எனக்கு முற்றிலும் விரோதமானவர்கள். அவர்கள் எனக்கு விரோதமல்ல, அவர்கள் வார்த்தைக்கு தான் விரோதமாய் இருந்தனர். மனிதன் என்னும் நிலையில், எனக்கு விரோதமாக அவர்கள் ஒன்றும் கூறமுடியாது. அவர்களுக்கு நான் எந்த தீங்கும் இழைக்கவில்லை. ஆனால் அவர்கள் அதை குறித்து தான் பயப்படுகின்றனர். பாருங்கள்? 63 அவர்கள் மலையின் மேலிருந்த அந்த சபையில் கூட்டம் ஒன்றை நடத்தினர். அங்கே குளுமையாக இருக்கும். இந்த மகத்தான கூட்டத்தின் கடைசி மூன்று இரவுகளில் பேசும்படியாக ஒரு மிஷனரி பிரசங்கித்துக் கொண்டே வந்து மாற்கு 16ஐ அடைந்தார். அப்பொழுது அவர், “இன்று அநேகருக்கு தெய்வீக சுகமளித்தலில் நம்பிக்கையில்லை. நான் ஒரு இந்தியன். நான் இந்தியாவிலிருந்தபோது அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து சகோ, பிரன்ஹாம் என்னும் பெயர் கொண்ட ஒருவர் வந்திருந்தார்'' என்றார். அவர் நடந்து கொண்டே , ”என் மனைவி புற்று நோயில் மரித்துக் கொண்டிருந்தாள். நான் பார்வை இழந்தவனாயிருந்தேன்“ என்று ஏதோ அவ்விதமாகக் கூறினார். அவர் தொடர்ந்து, ”எங்களில் ஒருவருக்கு அவர் ஜெபம் செய்தார், வேறொருவரை அவர் கூட்டத்திலிருந்து பெயர் சொல்லி அழைத்தார். நாங்கள் பேசுகின்ற மொழி அவருக்குத் தெரியாமலிருந்தும் அவர் இப்படி செய்தார், அவர் தேவனுடைய வல்லமையை உரைத்தார். நாங்கள் சுகமடைந்து, இப்பொழுது இங்கிருக்கிறோம்'' என்றார். அவர்கள் அவர் வாயை அடைக்கப் பார்த்தார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை. பாருங்கள், அவர்கள் நடத்திய கூட்டத்திலேயே இப்படி நிகழ்ந்தது. அவர்கள் இப்படிப்பட்ட ஒன்று உள்ளது என்பதை மறுதலித்தனர். அங்கிருந்த சிலர்... இந்த பையனின் சகோதரி அதைக் குறித்து ஒன்றுமே கூறவில்லை. அவள் ஏதாவது ஒருவகையில் தொடர்பு கொண்டிருந்தால், அவளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தனர். அங்கிருந்த ஸ்திரீகளில் ஒருத்தி ''அதை நான் நம்புகிறேன்'', என்றாள். 64 ரெபேக்காளும் ஜார்ஜும் அந்த ஸ்திரீயைக் காணச் சென்றிருந்தனர். அவள் சிறிது மூளைக் கோளாறு ஏற்பட்டிருந்த ஒரு பெண்ணைக் கொண்டு வந்தான். அன்றொரு இரவு அந்த பெண்ணை நான் காண வரும்படி அழைக்கப்பட்டேன். நான் அங்கு சென்றிருந்தபோது இந்த ஸ்திரீயும் அங்கிருந்தான். அந்த பெண்ணிடம், “நீ விசுவாசியா?'' என்று கேட்டேன். அவள், “இல்லை, நான் விசுவாசியா இல்லையா என்று எனக்குத் தெரியாது'' என்று பதிலளித்தாள். அவளுக்கு மூளைக் கோளாறு கிடையாது. அது ஒரு பிசாசின் ஆவி. அதை அவர்கள் உணருவதில்லை. பாருங்கள், அது உங்களை பிடிக்கும் போது நீங்கள் அறிவதில்லை. அது பிடித்தவுடன், அந்த நபர் வன்முறையில் ஈடுபடுகின்றார். அவர்கள் அதை அறிவதில்லை. இந்த குட்டைகால் சட்டை அணிந்து தெருக்களில் செல்லும் ஸ்திரீகள், தங்களைப் பிசாசின் ஆவி பிடித்துள்ளது என்பதை உணருவதில்லை. அவர்களுடைய கணவருக்கு விரோதமாக எந்த பொல்லாப்பையும் செய்யவில்லையென்று அவர்கள் நிருபிக்கலாம், சத்தியமும் செய்யலாம். ஆனால் பிசாசின் ஆவி பிடித்துள்ளது என்று அவர்களுடைய இருதயத்தின் ஆழத்தில் அவர்கள் உணருவதில்லை. அவர்களை அது பிடித்துள்ளது. இல்லையெனில் ஒரு மனிதனுக்கு முன்னால் ஒரு பெண் தன் ஆடைகளை ஏன் களைய வேண்டும்? வேதத்தில் ஒருவன் மாத்திரமே அப்படி செய்திருக்கிறான். அவன் பிசாசு பிடித்தவனாயிருந்தான். மற்றவர்கள் தங்களை மூடிக்கொள்ள முயல்கின்றனர். இவர்களோ அதை உணருவதில்லை. அது மிகவும் தந்திரமாக நேரிடுகிறது. நீங்கள் கவனமாக இருந்து, உங்களை தேவனுடைய வார்த்தையுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டு, நீங்கள் எந்நிலையில் இருக்கின்றீர்கள் என்பதை அறிந்து கொள்ளுதல் அவசியம். 65 அந்த வாலிபப்பெண் என்னிடம், ''நான் குழந்தையாயிருந்தபோது ஞானஸ்நானம் பெற்றதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த விதமான ஒன்றை விசுவாசிப்பதா இல்லையாயென்று எனக்குத் தெரியவில்லை“ என்றாள். நான், “நீ இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறாயா?'' என்று கேட்டேன். அவள், “நான் விசுவாசிக்கிறேனா இல்லையாவென்று எனக்குத் தெரியவில்லை. இப்படிப்பட்ட கலக்கமுண்டாக்கும் காரியங்களை நான் நம்புவது கிடையாது'' என்றாள். “இந்த கலக்கமுண்டாக்கும் காரியத்தை நீ நம்பாமல் இருக்கலாம். ஆனால் இயேசு தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டேன், அவள், “ஓ, அவர் ஒருக்கால் அப்படி இருந்திருக்கலாம்” என்றாள். நான், ''அவர் இன்றைக்கும் மாறாதவராயிருக்கிறார். அவர் உன்னை இரட்சிப்பார் என்று விசுவாசிக்கிறாயா?“ என்று கேட்டேன். அவள், “அற்புதங்கள் என்பவை இருக்கின்றனவா? அதையெல்லாம் நான் நம்புவதில்லை'' என்றாள். 66 நான், ''நீ ஒரு கூட்டத்தில் அமர்ந்திருந்து பரிசுத்த ஆவியானவர்- அவர் ஒருவரே தேவன்- ஜனங்களின் மத்தியில் கிரியை செய்வதை கண்டால் என்ன செய்வாய்? பிதாத்துவத்தில் தேவன் அக்கினி ஸ்தம்பத்தில், மற்றும் தீர்க்கதரிசிகள். குமாரனில் தேவன், பிறகு அவருடைய ஜனங்களுக்குள் தேவன். அவை தேவனுடைய தன்மைகள், ஒரே மகத்தான தேவன் நித்திய காலமாக இருக்கிறார். அவர் ஜனங்களின் மத்தியில் கிரியை செய்து, குருடர்கள் பார்வையடையவும், செவிடர்கள் கேட்கவும் செய்து, கூட்டத்திலுள்ள ஜனங்களிடம், அவர் பூமியிலிருந்தபோது செய்த விதமாகவே, அவர்களுக்கு என்ன கோளாறு என்று எடுத்துக் கூறுவாரானால், நீ என்ன சொல்வாய்?“ என்று கேட்டேன். அவள், “அது ஒரு ஜோதிடக் கலையாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றாள். அப்பொழுது நான், “நான் நினைத்ததைக் காட்டிலும் நீ மோசமான நிலையில் இருக்கிறாய். உனக்குப் பைத்தியம் பிடித்திருந்தால் நலமாயிருக்கும். அப்படியானால் நீ கணக்கு கொடுக்க வேண்டிய அவசியமிராது. ஆனால் உனக்குப் பிசாசு பிடித்திருக்கிறது. கிணற்றண்டை இருந்த ஸ்திரீயிடம் இயேசு அவளுடைய புருஷர்களைக் குறித்து கூறினார். ஜனங்களைப் பார்த்து அவர்களுடைய சிந்தனையை அறிந்துகொண்டாரே! அதையெல்லாம் நீ ஜோதிடம் என்ற அழைப்பாய்? நீ லூத்தரன் என்னும் ஸ்தாபனப் போர்வையால் மூடப்பட்டிருக்கிறாய். அதற்கு முரணான எதுவும் தவறு என்று நினைக்க முற்படுகிறாய்” என்றேன். மனிதன் வார்த்தை என்னும் போர்வையினால் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அதற்கு முரணான எதுவும் தவறாகும். இயேசு, “ஒவ்வொரு மனிதனுடைய வார்த்தையும் பொய்யாயிருக்கட்டும், என்னுடையது சத்தியமாயிருக்கட்டும்” என்றார். 67 விஞ்ஞானம் நிறைந்த ஒரு காலத்திலே, நோவா என்னும் பெயர் கொண்ட ஒரு மனிதன் இருந்தான். அவன் தேவனுடைய வார்த்தையைக் குறித்து வெட்கப்படவேயில்லை. தேவன் அவனை சந்தித்து அவனுடன் பேசினார். அவர் தேவனென்று அவன் அறிந்திருந்தான். அவர், “மழை பெய்யப் போகின்றது'' என்றார். அதற்கு முன்பு மழை பெய்ததே கிடையாது. ஆனால் அவனோ மழை பெய்யும் என்று முழு நிச்சயமாக நம்பினான். அவனுடைய விசுவாசத்தை கிரியையில் காண்பிக்க அவன் வெட்கப்படவில்லை. ஒரு பேழையை செய்ய அவனுக்கு நூற்றிருபது ஆண்டுகள் பிடித்தது. அப்பொழுது உலகம் அவனுக்கு விரோதமாயிருந்தது. அவனுடைய நாட்களில் அவன் தேவனுடைய வார்த்தையைக் குறித்து வெட்கப்படவேயில்லை. அதன் காரணமாக அவனையும் அவன் வீட்டாரையும் தேவன் காப்பாற்றினார். மற்றவர்களுக்கு அது எவ்வளவு மூடத்தனமாக இருந்திருக்கக்கூடும்? ஆனால் அவனோ தேவனைச் சந்தித்தான். மற்றது எவ்வளவு விஞ்ஞான ரீதியாக தென்பட்ட போதிலும், அது எவ்வளவு முரணாகக் காணப்பட்டு, “அது நடக்கவே நடக்காது, அது நடக்கவே நடக்காது'' என்று கூறின போதிலும் அவன் தேவனை சந்தித்தான். நீங்கள் தேவனுடன் பேசியிருந்தால் அப்படித்தான் உறுதியுடையவர்களாய் இருப்பீர்கள். மற்றவர் வேறு எதையாகிலும் கூறினால் அதை நீங்கள் மூடத்தனம் என்று கருதுவீர்கள். நான் கூறுவதை சத்தியம் என்று ஏற்றுக்கொள்ளும் ஒரு சிலர் இவ்வுலகில் உள்ளனர். நான், “கர்த்தர் உரைக்கிறதாவது”, “நான் அரிசோனாவுக்குச் செல்வேன். அங்கு கூட்டமாகக் கூடியிருக்கின்ற (Cluster) ஏழு தூதர்களை சந்திப்பேன்” என்று கூறினபோது, அது நிறைவேறுவதைக் காண ஒரு கூட்டம் மனிதர் இருந்தனர். அன்றொரு இரவு, “லாஸ் ஏஞ்சலிஸ் கடலுக்குள் மூழ்கிவிடும்'' என்று கூறினேன். நீங்கள் என்றென்றும் தவறாத தேவனை, அவர் செய்வார் என்று வாக்களித்ததை அப்படியே செய்யும் தேவனை- அவர் எக்காலத்தும் அப்படியே செய்து வந்துள்ளார் நீங்கள் சந்திக்கும் போது, நீங்கள் அதைக் குறித்து வெட்கப்படுவதேயில்லை. நீங்கள் பின் சென்று தர்மசங்கடமான நிலையையடைய வேண்டிய அவசியமில்லை. நீங்கள் முழு உலகிற்கும் அதை தெரியப்படுத்தலாம். ஒரு மனிதன் தேவனை சந்தித்து அவருடன் பேசி, தேவனுடைய உண்மைத்துவம் அவனுடைய இருயத்தில் அவனுடையதாகி விடும்போது, அதைக் குறித்து அவன் வெட்கப்படுவதேயில்லை. 68 நோவா வெட்கப்படவில்லை. உலகிலிருந்த மற்றவர்க்கு அது மூடத்தனமாகத் தென்பட்டது. ஆனால் அவனுக்கு தென்படவில்லை . மோசே பார்வோனின் முன்னிலையில் நின்றபோது இன்னின்னவை நிகழும் என்று அவனிடம் கூற அவன் வெட்கப்படவில்லை. ஏனெனில் அவன் தேவனை சந்தித்திருந்தான். தேவன் இதைக் குறித்து எரியும் முட்செடியில் அவனிடம் கூறினார். அவனோ, “நான் திக்குவாயன்” என்றான். அவனுக்கு பேச்சில் கோளாறு இருந்தது. ஆனால் அவரோ, “அதோ ஆரோன் வருகிறான். நீ அவனுக்கு தேவனாயிருப்பாய், அவன் உனக்கு தீர்க்கதரிசியாயிருப்பான். அவனால் நன்றாக பேசமுடியும் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் உன் வாயுடன் இருப்பேன். மனிதனைப் பேசும்படியாக வைத்தது யார்?“ என்றார். ஆமென். அது எனக்குப் பிரியம். அது தேவன். ”மனிதனை செவிடாகவும் ஊமையாகவும் செய்தது யார்? மனிதனைப் பேச வைத்தது யார்?'' தேவன். அவன், “ஆண்டவரே, உமது மகிமையை எனக்குக் காண்பியும்” என்றான். அவர், “உன் கையில் என்ன இருக்கிறது?” என்றார். அவன், “ஒரு கோல்”'என்றான். அவர், ''அதை தரையிலே போடு'' என்றார். அது சர்ப்பமாக மாறினது. ''அதை கையிலெடு'' என்றார். அது மறுபடியும் கோலாக மாறினது. ஆமென். அவர் தேவன். ''உன் கையை அறைக்குள் போடு“. அதை போட்டு அவன் வெளியே எடுத்த போது, அது குஷ்டம் பிடித்திருந்தது. அவர், ”மறுபடியும் அறையில் போட்டு அதை வெளியே எடு“ என்றார், அது மற்ற கையைப் போல் ஆனது. ”நானே தேவன்.“ அவன் பார்வோனின் முன்னால் சென்று, தேவன் கூறச் சொன்ன அனைத்தையும் கூறினான். அவன், “இது இப்படி இப்படியாகும்'' என்றான். அவன் மண்ணை எடுத்து காற்றில் தூவி, ''கர்த்தர் உரைக்கிறதாவது. பேன்கள் உண்டாகக்கடவது'' என்றான். அப்பொழுது பேன்கள் தோன்றின. அவன் தண்ணீரை எடுத்து நதியில் ஊற்றி, ''கர்த்தர் உரைக்கிறதாவது ” என்றான். அப்பொழுது நதி முழுவதுமே இரத்தமாக மாறினது. அவன் வானத்திலிருந்து கல்மழையை வரவழைத்தான். 69 கடைசி நாட்களில் இந்த வாதைகள் மறுபடியும் உண்டாகும் என்று உங்களுக்குத் தெரியுமா? வேதாகம காலத்தில் விபச்சாரம் செய்பவர்க்கு அளிக்கப்பட்ட தண்டனை கல்லெறிந்து கொல்லப்படுதலாகும். அது போன்று, விசுவாசிக்காத சபையும் கல் மழையின் மூலம் கல்லெறிந்து கொல்லப்படும். ஒரு காலத்தில் அது தேவன் அளித்த தண்டனையாயிருந்தது. அவர் விசுவாசிக்காத இந்த உலகத்தை, விபச்சாரச் சந்ததியை, ஒவ்வொரு கல்லும் ஒருதாலந்து எடையுள்ள- அதாவது நூறு பவுண்டு எடையுள்ள- கற்களை வானத்திலிருந்து பொழிந்து கல்லெறிவார். தேவனுடைய இந்த தண்டனையின் விளைவாக இந்த விபச்சாரச் சபை அழியும், இந்த விபச்சார உலகம் அழியும். சபையே, தேவனுடன் சரியாகிவிடு! நாமெல்லாரும் அதையே செய்ய வேண்டும்.தேவனிடத்தில் திரும்ப வேண்டும். 70 சுருங்கிய முகமும், நரைத்த தாடியும், வழுக்கை தலையும், மெலிந்த கைகளும் கொண்ட அந்த எண்பது வயதான எலியா வனாந்தரத்தில் உட்கார்ந்து கொண்டு ஜனங்களின் பாவங்களை கவனித்துக் கொண்டிருந்தான். ஒருநாள் காலை கர்த்தர் அவனுடன் பேசி, “நீ ஆகாபிடம் சென்று, நீ வரவழைக்கும் வரைக்கும் வானத்திலிருந்து ஒரு துளி பனியும் கூட பெய்யாது என்று அவனிடம் சொல்'' என்றார். அவனுடைய வயோதிப கண்கள் அந்த வெள்ளை தாடி முகத்திலிருந்து நோக்குவதையும், அவனுடைய கையில் ஒரு கோலையுடையவனாய் பதினாறு வயது சிறுவன் நடந்து செல்வதைப் போல் தெருவில் நடந்து செல்வதையும் என்னால் காண முடிகிறது. அவன் ராஜாவின் சமுகத்தையடைந்து, ”நான் சொல்லும் வரைக்கும் வானத்திலிருந்து ஒரு பனித்துளியும் கூட விழாது'' என்றான். அவன் தேவனைக் குறித்தோ அவருடைய வார்த்தையைக் குறித்தோ வெட்கப்படவில்லை. அவன் ராஜாவிடமோ அல்லது வேறு யாரிடமோ கூற வெட்கப்படவில்லை. அவன் ஒளிந்து கொண்டு, “ஆகாபே, நீ...'' என்று கூறவில்லை. 71 “எனக்கு அதிக விசுவாசம் தேவை என்னும் நிலையை அடைந்துள்ளேன்” என்று அன்றொரு நாள் உங்களிடம் நான் கூறினது என் நினைவுக்கு வருகின்றது. அதற்காகத்தான் நான் வீடு வந்திருக்கிறேன் - ஒரு புது விசுவாசப் பெருக்கை பெறுவதற்காக. இப்பொழுது ஜனங்களுக்கு ஜெபம் செய்யும் போது, ''திரு. பிசாசே, அவரை விட்டு தயவு கூர்ந்து வெளியே வருவாயா?'' என்று கெஞ்சுவது போல் உள்ளது. அப்படியல்ல! விசுவாசத்துக்கு தசைகள் உண்டு. அதற்கு நெஞ்சில் மயிர் முளைத்துள்ளது. அது பேசும்போது எல்லாமே அமைதியாகி விடவேண்டும். “திரு பிசாசே, வெளியே வா” என்று கெஞ்ச வேண்டாம். ''இங்கிருந்து வெளியே போ. நான் தேவனிடமிருந்து அதிகாரம் பெற்ற தேவனுடைய குமாரன். அவர்களை தொந்தரவு செய்யாதே“ என்று அதிகாரத் தோரணையில் கூற வேண்டும். அப்பொழுது அது கிரியை செய்யும். நீங்கள் பிசாசிடம் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை. அவனுடன் உங்களுக்கு யாதொரு தொடர்புமில்லை. நீங்கள் தேவனுடைய வார்த்தையைக் குறித்து வெட்கப்படக்கூடாது. உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டளையைக் குறித்து வெட்கப்படக்கூடாது. உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஊழியத்தைக் குறித்து நீங்கள் வெட்கப்படக் கூடாது. நீங்கள் யாரென்பதைக் குறித்து வெட்கப்படக் கூடாது. எனக்குள்ள ஒரே ஒரு வெட்கம் என்னவென்றால், நான் பிரன்ஹாமாக இருக்கிறேன் என்பதுதான். அது உலகில் நேர்ந்த என் பிறப்பு. என் தோல்விகளைக் குறித்து நான் வெட்கப்படுகிறேன். ஆனால் அவருடைய ஊழியக்காரன் என்னும் நிலையில் நான் வெட்கப்படுவதில்லை! அவருடைய வார்த்தையைக் குறித்து நான் வெட்கப்படுவதில்லை. அது ராஜாக்களானாலும், அதிகாரங்களானாலும், யாராயிருந்தாலும் நான் பதில் சொல்ல ஆயத்தமாயுள்ளேன். தேவன் அதை எதிர்பார்க்கிறார். 72 மோசே பார்வோனுக்கு முன்பாக நின்றான். பார்வோனுக்கிணங்கி சில நாட்கள் வனாந்தரத்தில் கழித்துவிட்டு திரும்பிவர முடியாது என்று ஆணித்தரமாகக் கூற அவன் வெட்கப்படவில்லை. பார்வோன், “உங்கள் ஸ்திரீகளில் சிலரும், பிள்ளைகளும் இங்கு தங்கியிருக்கட்டும்'' என்றான். மோசேயோ, “நாங்கள் எல்லோரும் போகவேண்டும். எங்கள் ஆடுமாடுகள் ஒன்றையும் கூட இங்கு விட்டுச் செல்லமாட்டோம். எல்லாவற்றையுமே நாங்கள் கொண்டு செல்வோம்'', என்றான். அவன் வெட்கப்படவில்லை. ஏன்? அவன் மீட்பின் வெளிச்சத்திற்குள் வந்திருந்தான். அதனால் தான் வியாதிப்பட்ட மனிதனோ, ஸ்திரியோ, அல்லது வேறுயாராகிலும் ஒரு முறை தேவனுடைய பிரசன்னத்தில் வந்து, தேவன் அவர்களை சுகமாக்கிவிட்டார் என்று அறிந்துகொள்வார்களானால், அவர்கள் மீட்பின் வெளிச்சத்திற்குள் காலடி எடுத்து வைக்கின்றனர். அப்பொழுது நீங்கள் எதனுடனும் ஒப்புரவாகமாட்டீர்கள். மோசேயின் இருதயத்தில் 'விடுவிக்கப்படுதல்' (Deliverance) என்பது இருந்தது. ஏனெனில், “நான் ஆபிரகாமின் தேவன். ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் செய்தவர் நானே. மீட்கப்பட வேண்டிய நேரம், விடுவிக்கப்பட வேண்டிய நேரம் வந்து விட்டது. அவர்களை விடுவிக்க உன்னை நான் அனுப்புகிறேன்'', என்று கூறின தேவனை அவன் சந்தித்தான். அப்படியிருக்க, அவன் எதற்காக கெஞ்சவேண்டும்? 73 பார்வோன் அவனைக் கொன்று போட்டிருக்கலாம். அவன் ஒரு சாதாரண மனிதன், ஒரு அடிமை. வேண்டுமானால் பார்வோன் அவனைக் கொன்றிருக்கலாம். ஆனால் அவனோ வார்த்தையைக் குறித்து வெட்கப்படவேயில்லை, அவன் பார்வோனின் முன்னால் முழங்கால்படியிட்டு அவனைக் கெஞ்சவில்லை. அவன், ''அவர்களைக் கொண்டு போக நான் வந்திருக்கிறேன்“ என்றான். பார்வோன், “அவர்களைக் கொண்டு போகக் கூடாது'' என்றான். மோசே, “சரி, அப்படியானால் வண்டுகள் தோன்றும். அதன் வழியாக நீர் கஷ்டப்பட்டு நடந்து செல்ல நேரிடும்'', என்றான். அங்கு அதுதான் நடந்தது. அப்பொழுது பார்வோன், “மோசே, அவர்களை கொண்டு போய் விடு'' என்றான். மோசே, ''சரி, இப்பொழுதாவது நீர் மனந்திரும்புகிறீரா?'' என்றான். பார்வோன், “அவர்களை சில நாட்கள் வனாந்தரத்துக்கு கொண்டு போகலாம்'' என்றான். மோசே, “அப்படியானால் பேன்கள் தோன்றும்'' என்றான். ஆமென். ”இருள் சூழ்ந்து கொள்ளும்''. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடம் காணக்கூடாத அளவுக்கு இருள் சூழ்ந்து கொண்டது. முடிவில் மரணம் உண்டானது. பார்வோன் தொடங்கி அவன் வேலைக்காரன் வரைக்கும், எல்லா குடும்பங்களிலும் தலைச்சன் பிள்ளை கொல்லப்பட்டது. மோசே யாரையும் கெஞ்ச வேண்டிய அவசியம் இருக்கவேயில்லை. அவன் ஆபிரகாமின் குமாரன். அவன் ஆவியில் பிறந்தவனாய், எகிப்துக்கு தேவனிடத்திலிருந்து கட்டளையையும் செய்தியையும் பெற்றவனாயிருந்தான். அப்படியானால், சபையிலிருந்து மணவாட்டியை இந்த மணி நேரத்தில் தெரிந்துகொள்ள, தேவன் அதையே செய்யலாம் அல்லவா? (சபையோர் “ஆமென்” என்கின்றனர்- ஆசி). தானியேல், இல்லை, 74 தாவீது சவுலுக்கு முன்பாக பயப்படவில்லை, எல்லோரும் கோலியாத்தைக் கண்டு நடுங்கின போது, இவன் சவுலுக்கு முன்பாக பயப்படாமல் சென்று, “உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, ஒரு கரடி வந்து ஒரு ஆட்டைப் பிடித்துக் கொண்டது. நான் அதை தொடர்ந்து போய் ஒரு கவண் கல்லில் கொன்று போட்டேன். ஒரு முறை ஒரு சிங்கம் ஒரு ஆட்டைப் பிடித்துக் கொண்டு காட்டிற்குள் ஓடினது. ஒரு கவண் கல்லில் அதை நான் வீழ்த்தினேன். அது எழுந்து என் மேல் பாய்ந்த போது, அதைக் கொன்று போட்டேன். அப்படியிருக்க தேவன்...'' என்றான். பின் வாங்கிப் போன ராஜா அங்கு நின்று கொண்டிருக்க, பரலோகத்தின் தேவனை வழிபடுவதாக உரிமை கோரின அந்த சிப்பாய்கள், விருத்தசேதனமில்லாத அந்த பெலிஸ்தியன் அங்கு நின்று கொண்டு ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளுக்கு சவால் விடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். தாவீது, ”உம்முடைய அடியானாகிய நான் அவனையும் கொன்று போடுவேன். சிங்கத்தையும் கரடியையும் என் கையில் ஒப்புக் கொடுத்த அந்த தேவன், விருத்தசேதனமில்லாத இந்த பெலிஸ்தியனையும் என் கைகளில் ஒப்புக் கொடுப்பார்“ என்றான். அவன் தடுமாறவில்லை. அவன், ”ஒருக்கால் அப்படி நடக்கும்'' என்று கூறவில்லை. “அது நிச்சயமாக நடக்கும்” என்று கூறினான். அவன் வெட்கப்படவில்லை . 75 தன்னைத் தவிரவேறு யாருக்கும் ஜெபம் ஏறெடுக்கப்படக் கூடாது என்னும் ராஜாவின் கட்டளைக்கு தானியேல் பயப்படவில்லை. அவன் ஜன்னல்களையும் பலகணிகளையும் திறந்து ஒரு நாளில் மூன்று வேளை ஜெபம் செய்தான். அவன் பயப்படவேயில்லை, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ அந்த எரிகிற அக்கினி சூளைக்குப் பயப்படவில்லை. அவர்கள், “எங்கள் தேவன் எங்களை தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். அவர் விடுவிக்காமற் போனாலும், நீர் நிறுத்தின அந்த சிலையைப் பணிந்து கொள்ள மாட்டோம்” என்றனர். அதைக் குறித்து அவர்கள் வெட்கப்படவில்லை. இல்லை, ஐயா. இல்லை, ஐயா. அதைக் குறித்து அவர்கள் நிச்சயமாக வெட்கப்படவில்லை. ஏனெனில் அவர்கள் அறிந்திருந்தனர். சிம்சோன் பெலிஸ்தியருக்கு முன்பாக வெட்கப்படவில்லை. ஆயிரம் பேர் அவனை எதிர்த்து வந்த போது, அவன் ஒரு கழுதையின் தாடை எலும்பை எடுத்துக் கொண்டான். அவர்களின் தலைச்சீராக்கள் பித்தளையினால் செய்யப்பட்டு, ஒன்றரை அங்குலம் கனமாயிருந்தது. அவன் தாடை எலும்பை கொண்டு ஆயிரம் பேரை முறியடித்த பின்பும், அது அவன் கையில் உடையாமல் இருந்தது. அவன் பயப்படவில்லை. அவன் கைகளில் கிடைத்ததை அவன் எடுத்துக் கொண்டு, தன் வேலையை ஆரம்பித்தான். தேவனுடைய ஆவி அவன் மேலிருப்பதை அவன் அறிந்திருந்தான். அவன் எடுத்துக் கொண்டு, தன் வேலையை ஆரம்பித்தான். அவன் நசரேயனாகப் பிறந்திருந்தான் என்றும் அவன் அறிந்திருந்தான். அவன் தேவனுடைய பணிவிடைக்காரன். அவன் தேவனுடைய சித்தத்தில் உள்ள வரைக்கும், எத்தனை ராஜாக்களும், பெலிஸ்தியரும் அல்லது வேறெதாகிலும் அவனை எதிர்த்து வந்தாலும், ஒன்றும் அவன் முன்னால் நிற்கமுடியாது. அது உண்மை . 76 யோவான் ஸ்நானன், தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டுமென்று வனாந்தரத்தில் அவனிடம் வந்த தேவனுடைய வார்த்தையை “இதோ, உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று அவன் கூற வெட்கப்படவில்லை, ஏனெனில் தேவனுடைய ஆவி அவன் மேல் தங்கியிருந்தார். ஆசாரியர்களுக்கு முன்னால் அவன் வெட்கப்படவில்லை. பிலிப்புவின் மனைவி ஏரோதுடன் வாழ்ந்து கொண் டிருந்தபோது, அவனை நோக்கி இவன் (யோவான் ஸ்நானன் தமிழாக்கியோன்) சென்ற போது தேவனுடைய வார்த்தையைக் குறித்து இவன் வெட்கப்படவில்லை. படிப்பு ஒன்றுமில்லாத, ஆட்டு ரோமம் போல் முடிதொங்கிக் கொண்டிருந்த முகத்தையுடைய இவன் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு நடந்து, தைரியமாக ஏரோதின் முன்னிலையில் சென்று, “இவளை வைத்துக் கொண்டிருப்பது நியாயமல்ல” என்றான். அவன் தேவனுடைய வார்த்தையையக் குறித்து வெட்கப்படவில்லை. நிச்சயமாக. அவன் முற்றிலும் அதைக் குறித்து வெட்கப்படவேயில்லை. ஸ்தேவான், அவனும் கூட வார்த்தையைக் குறித்து வெட்கப்படவில்லை. 77 பெந்தெகொஸ்தே நாளன்று மேலறையில் ஒன்று கூடியிருந்தவர்கள் மேல், தேவன் வாக்குரைத்திருந்தபடியே, பரிசுத்த ஆவி விழுந்தது. லூக்கா 24:49 இவ்வாறு கூறுகின்றது: ....''என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை. இதோ நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள்“ தேவனுடையவார்த்தை, அவர்களுக்கு அளித்திருந்த வாக்குத்தத்தம்: “என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். அங்கே காத்திருங்கள். வேத சாஸ்திரத்தையோ கல்வியையோ பெற்றுக் கொள்ளாதீர்கள். பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் அங்கே இருங்கள்”. உன்னதத்திலிருந்து பெலன் பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல் இறங்கினபோது, அவர்கள் சுவிசேஷத்தைக் குறித்து வெட்கப்படவில்லை. பேதுரு எழுந்து நின்று, “நீங்கள் ஒவ்வொருவரும் மனம் திரும்புங்கள். உங்கள் பொல்லாத கரங்களினால் சமாதானத்தின் அதிபதியை சிலுவையில் அறைந்து கொன்றீர்கள். தேவனோ அவரை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பினார். அதற்கு நாங்கள் சாட்சிகள், 'கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்' என்று யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது'' என்றான். அவன் சுவிசேஷத்தைக் குறித்து வெட்கப்படவேயில்லை. 78 நான் சற்று முன்பு கூறினது போல், ஸ்தேவான் அங்கு பலமான சுழல்காற்றைப் போல் சென்றான். அவன் ஒரு பிரசங்கியல்ல. அவன் ஒரு மூப்பன், டீக்கன் மாத்திரமே. ஆனால் அவன் எல்லாவிடங்களிலும் இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்து சாட்சி பகிர்ந்தான். அவன் தேவனை சந்தித்திருந்தான். அவனை நிறுத்தப் பாருங்கள்! உலர்ந்த ஒரு காலத்தில், காற்றடித்துக் கொண்டிருக்கும் ஒரு நாளில், எரிந்து கொண்டிருக்கும் வீட்டை அணைக்க முயல்வது போன்றது அது. ஒவ்வொரு முறை காற்றடிக்கும் போதும், அது வேறொரு தீயை மூட்டினது. அவனை சனகரீப் சங்கத்திற்கு முன்பாக குலுக்கினார்கள். அது என்னவென்று உங்களுக்குப் புரிகின்றதா? அது உலக சபைகள் ஆலோசனை சங்கத்தைப் போன்றது. எல்லா மார்க்கங்களும் உலக சபைகள் ஆலோசனை சங்கத்தில் ஒன்றாக இணைவது போல், அவர்கள் அனைவரும் சனகரீப் சங்கத்தில் ஒன்று கூடியிருந்தனர். அது பரிசேயர், சதுசேயர், ஏரோதியர் யாராயிருப்பினும், அவர்கள் அந்த சங்கத்திற்கு தான் வரவேண்டும். அவர்கள் அவனைப் பிடித்து இழுத்து - ஒரு ஸ்தாபனம் மாத்திரமல்ல, அந்த பெரிய சங்கம் முழுவதுமே- “அவனை மிரட்டி பயமுறுத்தப் போகிறோம்'' என்றனர். அன்று காலை அவன் அங்கு அடைந்தபோது, அவனுடைய முகம் தேவ தூதனைப் போல் பிரகாசித்ததாக வேதம் கூறுகின்றது. அவன், ''சகோதரர்களே, நமது பிதாக்கள் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டில் தங்கியிருந்தனர்'' என்று கூறிவிட்டு, வேத வாக்கியங்களை எடுத்துக் கூற ஆரம்பித்தான். அவன் பேசி முடிக்கும் தருணத்தில் பரிசுத்த ஆவி அவன் மேல் வந்தார். அவன், “வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப் போலவே நீங்கள் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்து நிற்கிறீர்கள்” என்றான். அவன் சுவிசேஷத்தைக் குறித்து வெட்கப்படவில்லை. அவன் வார்த்தையைக் குறித்து வெட்கப்படவில்லை, அவன் சனகரீப் சங்கத்திற்கு முன்பாக கவலை கொள்ளவில்லை, இல்லை. 79 பவுல் ஒரு யூதன், கமாலியேலிடம் பயின்றவன், ஒரு மேதை. ஒரு நாள் தமஸ்குவுக்குச் செல்லும் வழியில் அவன் தேவனுடைய பிரசன்னத்திற்கு வந்து அவரிடம் தொடர்பு கொண்டான். பரலோகத்திலிருந்து ஒரு தூதன் அக்கினி ஸ்தம்ப வடிவில் இறங்கி வந்தார். ஒரு ஒளி அவனைத் தாக்கி தரையில் வீழ்த்தினது. அவன் எழுந்து, “ஆண்டவரே, நீர் யார்?'' என்றான். அவர், “நான் இயேசு” என்றார். அவன் அகிரிப்பாவுக்கு முன்னால் நின்று, நடந்ததை அவனிடம் கூறினான். அவன், “இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன். அது விசுவாசிக்கிற ஒவ்வொருவனுக்கும், அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவ பெலனாயிருக்கிறது” என்றான். நிச்சயமாக. 80 நண்பர்களே, நாம் ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்த மனிதர்களைப் பார்த்துக் கொண்டே வந்தோம். இப்பொழுது நேரமாகி விட்டது. இதைக் கூற விரும்புகிறேன். ஒரு மனிதன் ஒரு முறை தேவனுடன்- அவரே வார்த்தை - தொடர்பு கொண்டு விட்டு, அந்த வார்த்தை அவனுக்கு வெளிப்படையாகி இருக்குமானால், அவன் அதைக் குறித்து வெட்கப்படமாட்டான். அவன் கவலை கொள்ளமாட்டான். தேவனுடைய வார்த்தை ஒவ்வொன்றையும் விசுவாசிக்கிறேன் என்று கூற நான் வெட்கப்படுவதில்லை. தேவன் ஒன்றை என்னிடம் கூறி, அதை செய்யக் கட்டளை கொடுத்தால், நான் வெட்கப்படுவதில்லை. நான் பரிசுத்த ஆவியினால் நிறைந்திருக்கிறேன், அந்நிய பாஷை பேசுகிறேன் என்று கூற நான் வெட்கப்படுவதில்லை. கர்த்தர் எனக்கு தரிசனங்களைக் காண்பித்திருக்கிறார் என்று கூற நான் வெட்கப்படுவதில்லை. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று அறிக்கை செய்ய நான் வெட்கப்படுவதில்லை. “என் நாமத்தினிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்குமுன்பாகவும் கொண்டு போகப்படும்போது, என்னத்தைப் பேசுவோம் என்று கவலைப்படாதிருங்கள். நீங்கள் பேச வேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின்ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர். என்னைக் குறித்தும், என் வார்த்தையைக் குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக் குறித்து நானும் என் பிதாவின் முன்பாகவும் பரிசுத்த தூதர்கள் முன்பாகவும் வெட்கப்படுவேன்”. நாம் வெட்கப்படாமலிருக்கவும், அவருக்கு ஜீவிக்கிற சாட்சியாக இருக்கவும் தேவன் உதவிபுரிவாராக! 81 பழைய ஏற்பாட்டின் காலத்தில் தோன்றிய தீர்க்கதரிசிகள் அனைவரும் ஜீவிக்கிற வார்த்தையாகத் திகழ்ந்தனர். அவர்களே வார்த்தையாயிருந்தனர். அவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்பட்டதாக இயேசு கூறினார். அவர்கள் தேவர்களே. ஏனெனில் தேவனுடைய வார்த்தை அவர்களிடம் வந்தது. அவர்கள், “கர்த்தர் உரைக்கிறதாவது” என்றனர். மீட்பின் மூலமாகவும், இரட்சிப்பின் மூலமாகவும் தேவனை தன் இருதயத்தில் கொண்ட தேவனுடன் தொடர்பு கொண்டுள்ள கிறிஸ்துவின் சீஷன் எவனும் தேவனை சுதந்தரித்திருக்கிறான். அழிந்து போகிற இந்த சரீரத்தின் மூலம் தேவன் தம்மை வெளிப்படுத்தும் போது, நாம் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும், எப்படி நடக்க வேண்டும், எப்படி பேசவேண்டும்! யார் அதைக் குறித்து வெட்கப்பட முடியும்? நான் ஜெபர்ஸன்வில்லில் காவற் படையில் சேர்ந்து, எல்லா அதிகாரத்தோடும் தெருவில் நடக்க நேரிட்டால், இந்த பட்டினத்தைக் குறித்து வெட்கப்பட மாட்டேன். காவற்படையிலுள்ள ஒருவன் என்னும் முறையில் அந்தப் பட்டினத்தின் ஒரு பாகமாக இருந்து, ஒழுங்கையும் நல் நடத்தையையும் நான் நிலை நாட்டுவேன். யாராகிலும் ஒருவன் சிவப்பு விளக்கைக் கடந்து செல்ல நேரிட்டால், தவறு செய்த அவன் நீதிமன்றத்துக்கு வரும்படியாக அவனிடம் ஒரு சீட்டைக் கொடுக்க நான் வெட்கப்படமாட்டேன். அது என் வேலை. அதற்காக நான் சம்பளம் வாங்குகிறேன். பட்டினம் கொடுக்கும் சம்பளத்தால் நான் வாழ்கிறேன். அந்த பட்டினம் எனக்கு அதிகாரம் அளித்துள்ளது. எனவே ஒருவன் குடித்திருந்தாலும், என்ன தவறு செய்திருந்தாலும், அவர்கள் என்னை ஆதரிப்பார்கள். நான் காவற்படையை சேர்ந்தவனாதலால், எனக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு நான் என் கடமையை செய்கிறேன். நீங்களும் சட்டங்களைக் கைகொள்ள வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். 82 அது போன்று, நான் கிறிஸ்தவனாக இருந்து, ஆவியினால் நிறைந்து, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் சாட்சியை அணிந்து கொண்டு, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பேனானால், எந்த பிசாசும் நம்மை இங்கும் அங்கும் தள்ளி, “இதை செய்யாதே, அதை செய்யாதே” என்று கூற அனுமதியாதேயுங்கள். நீங்கள் அதை செய்யுங்கள். தேவன் உங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளார். பாருங்கள், நமக்கு வல்லமை கிடையாது. அந்த காவற்படைகாரனுக்கு ஒரு காரை பிடித்து நிறுத்தக் கூடிய பெலன் கிடையாது. அதன் மோட்டார் முன்னூறு அல்லது நானூறு குதிரை சக்தியைக் கொண்டதாயிருக்கும். அவனால் என்ன செய்யமுடியும்? ஆனால் அவனுக்கு அதிகாரம் உள்ளது. அதுதான் சபை. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் மூலமாகவும் அவருடைய வாக்குத்தத்தத்தின் மூலமாகவும் நாம் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறோம். அல்லேலூயா! “நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். அதைக் காட்டிலும் அதிக கிரியைகளைச் செய்வீர்கள்.” 83 இந்த சந்ததியில் அவரைக் குறித்து வெட்கப்படாதிருங்கள். இது பாவம் நிறைந்ததும், திகில் நிறைந்ததும், விபச்சாரமும் அழுகிய புண்கள் நிறைந்த சந்ததியுமாயுள்ளது. இதுவே பூமியில் இருக்கப்போகும் கடைசி சந்ததி. ஒழுக்கமுள்ள அனைத்துமே ஒழுக்கமற்றதாகிவிட்டது. நாட்டின் அரசியல் அழுக்காயுள்ளது! நாடுகள் உடைகின்றன, ஆப்பிரிக்காவிலுள்ள காடுகளிலும் கூட மிருக வேட்டைக்கு வருவோர், எல்விஸ் பிரஸ்லி, பாட் பூன் போன்றவர் பாடும் “ராக் அண்டுரோல்”, 'டிவிஸ்ட்' இசையைக் கேட்பதற்கென அதிக சக்தி வாய்ந்த வானொலிப் பெட்டிகளை அவர்களுடன் கூட கொண்டு வருகின்றனர். இவர்கள் தலையசைத்து ஆடுவதை அங்குள்ள சுதேசிகள் வியப்புடன் நோக்குகின்றனர். அவர்கள் பாட் பூன், எல்விஸ் பிரஸ்லி, ரிக்கி நெல்சன் போன்று அமெரிக்கர் அல்ல. அவர்கள் அப்படிப்பட்ட யூதாஸ்கள் அல்ல. ஆனால் அவர்கள்... பாருங்கள், அது ஒரு ஆவி. அது அமெரிக்காவில் மாத்திரமல்ல, உலகெங்கும் பரவியுள்ளது. அது முடிவில் அவர்களை அர்மகெதோன் யுத்தத்திற்கு கொண்டு சேர்க்கும். அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்களாயிருப்பினும்- ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் கூட- அவர்கள் அதே விதமாக நடந்து கொள்கின்றனர். இந்த ஆபாசமான செயல் ஒரே ஒரு மனிதனால் தொடங்கப்பட்டு, இப்பொழுது உலகம் பூராவும் பரம்பியுள்ளது. 84 அதே சமயத்தில் சுவிசேஷமும் சர்வ வல்லமையுள்ள தேவனின் வல்லமையும் உலகெங்கும் பரவியுள்ளது. இப்பொழுது பிரித்தெடுக்கப்படும் நேரமாயிருக்கிறது. தேவன் மணவாட்டியை அழைத்துக் கொண்டிருக்கிறார். பிசாசும் ஒரு சபையை அழைத்துக் கொண்டிருக்கிறது. நான் மணவாட்டியின் ஒரு பாகமாக இருப்பேனாக. நாம் ஜெபம் செய்வோம். அன்புள்ள தேவனே, கையெழுத்தை நாங்கள் சுவற்றில் காண்கிறோம். ஆண்டவரே, நாங்கள் முடிவு காலத்தில் இருக்கிறோம். எங்களுக்கு முன்னால் பெரிய காரியங்கள் உள்ளன என்று அறிவோம். இந்த குழப்பத்தின் மத்தியிலும் நித்திய ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்டுள்ள உத்தமமான ஜனங்கள் உள்ளனர். ஆண்டவரே, ஒரு மனிதனோ அல்லது இருவரோ இதை செய்வதென்பது கூடாத காரியம். ஆனால் தேவனோ, நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து எங்களால் இயன்ற வரைக்கும், இயேசு வருகிறார் என்னும் நற்செய்தியை ஒவ்வொரு மூலையிலும் அறிவித்து, சிறு அப்பத்தை- சிறு வார்த்தையைப் பரப்புவோமாக. எங்கெல்லம் கழுகுகள் உள்ளனவோ, இந்த ஆகாரத்தை, அது ஒலிநாடாவின் மூலம் வந்தாலும், அல்லது ஒரு வார்த்தை அல்லது ஒரு சாட்சியின் படி வந்தாலும் கழுகுகள் அதை அவர்கள் தலைமை காரியாலத்துக்குப் பின் தொடரும். ஏனெனில் “பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும்'' என்று எழுதப்பட்டுள்ளது. அருமை இயேசுவே, நாங்கள் புசிக்கும் பிணம் நீரே என்று நாங்கள் அறிவோம். நீரே வார்த்தை. வார்த்தை மாம்சமாகி எங்கள் மத்தியில் வாசம் பண்ணினார். தேவனே, இந்த வார்த்தையை நாங்கள் பரப்பும்போது, உண்மையான கழுகுகள் அதை கண்டுகொள்ள வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறோம். நாங்கள் பொல்லாங்கான, அலட்சியமுள்ள, பாரம்பரிய பக்தி கொண்ட ஜனங்களுக்கு முன்னால் நிற்கும் போது வெட்கப்பட்டிருப்போமாக. பவுல் தீமோத்தேயுவுக்குக் கூறினது போன்று. சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்து கொண்டு புத்திச் சொல்லு. ஏனென்றால் அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்கு திரளாகச் சேர்த்துக் கொண்டு சத்தியத்துக்கு செவியை விலக்கி, கட்டுக் கதைகளுக்குச் சாய்ந்து போகும் காலம் வரும். தேவனே, இது நிறைவேறும் நாளில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதைக் காண நான் போதிய நாட்கள் வாழும்படி செய்திருக்கிறீர். இந்த வசனமானது, முப்பத்தி மூன்று ஆண்டுகட்கு முன்பு நாட்டப்பட்ட இந்த கூடாரத்தின் மூலைக் கல்லில் வைக்கப்பட்டுள்ளது. 85 தேவனே, இங்குள்ள ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும். உம்மை சந்திக்க ஆயத்தமில்லாதவர் ஒருவராகிலும் இங்கிருப்பாரானால், உம்முடைய வார்த்தைக்கு இணங்காமல், உம்மை முகமுகமாய் சந்திக்காமல், உம்மை ஒரு கோட்பாடு போல ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை அறியாதவர்கள் இங்கிருப்பார்களானால், கர்த்தாவே இப்பொழுதே ஜீவனுள்ள தேவனை அவர்கள் முகமுகமாய் சந்திப்பார்களாக! இந்த மணிநேரத்தில் நீர் மிக அருகாமையில் இருக்கிறீர் என்பதை நம்புகிறேன். அவர்கள் யாரென்று எனக்குத் தெரியாது. அப்படிப்பட்டவர்கள் யாராகிலும் இங்கிருக்கின்றனரா என்றும் எனக்குத் தெரியாது. ஆனால் அவ்வாறு உம்மிடம் ஜெபம் செய்ய நான் ஏவப்பட்டேன். ஜனங்கள் என் ஜெபத்தைக் கேட்க வேண்டும் என்பதற்காக நான் ஜெபம் செய்யவில்லை. அப்படி செய்தால் நான் மாய்மாலக்காரனாயிருப்பேன். தேவன் அதை தடுப்பாராக! நான் மாய்மாலக்காரனாயிருக்க விரும்பவில்லை. ஆண்டவரே, உத்தமமான இருதயத்துடன் இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறேன். இன்று காலை நீர் ஆணிடம் பேசினாலும் பெண்ணிடம் பேசினாலும், அவர்கள் வெட்கப்படாமல் தாழ்மையுடன் வந்து, தங்கள் இருயத்தின் ஆழத்தில் உம்மை இப்பொழுது ஏற்றுக் கொண்டு, இன்று மாலையில் வந்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டு, ஒவ்வொரு வார்த்தையையும் பின்பற்றுவார்களாக. அவர்கள் வேறு முறையில் ஞானஸ்நானம் பெற்றிருந்தால்- தெளிக்கப்பட்டோ அல்லது ஊற்றப்பட்டோ “இந்த புத்கத்திலிருந்த ஒரு வார்த்தையை கூட்டினால் அல்லது ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டால் அவனுடைய பங்கை ஜீவ புத்கத்திலிருந்து தேவன் எடுத்துப் போடுவார்'' என்று நீர் கூறியுள்ளதை நாங்கள் நினைவுபடுத்திக் கொள்கிறோம். அவன் எவ்வளவாக அவனுடைய பெயரை ஜீவபுஸ்தகத்தில் சேர்க்க முயன்றாலும் அது நடக்காது. நாங்கள் உத்தமமாகவும் தாழ்மையாகவும் இருக்க அருள் புரியும். கர்த்தாவே, அவர்கள் உம்முடைய கரங்களில் உள்ளனர். உமக்கு தகுதியாய் தோன்றுகிறபடியே அவர்களுக்குச் செய்யும். ஏனெனில் அவர்கள் உம்முடையவர்கள். தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். 86 நாம் தலைவணங்கியிருக்கும் இந்நேரத்தில் நீங்கள் ஆழ்ந்து யோசிக்க விரும்புகிறேன். பதினைந்து நிமிடங்கள் அதிகம் எடுத்துக் கொண்டதற்காக உங்கள் மன்னிப்பை கோருகிறேன். இப்பொழுது நாம் மெளனமாக இசைக்கப் போகிறோம். “நான் உண்மையில் தேவனை சந்தித்தேனா?” என்று உங்கள் இருதயங்களில் சிந்தித்து பாருங்கள். இப்பொழுது உத்தமமாக சிந்தியுங்கள். ஏனெனில் அநேக சமயங்களில் அப்படி செய்ய முடியாமல் போகக்கூடும்... ஒருக்கால் அவருடைய வருகைக்கு முன்பு, இது கடைசி முறையாக நாம் சந்திக்கும் தருணமாயிருக்கலாம். நண்பர்களே, அது அருகாமையில் உள்ளது. ஒவ்வொரு வேத வாக்கியம் நிறைவேறிவிட்டது போல் தோன்றுகிறது. ஒருக்கால் உனக்கோ எனக்கோ இது கடைசி தருணமாயிருக்கலாம். இன்று இரவுக்கு முன்பு நாம் போய்விடக் கூடும். அவருடன் செல்வேன், வழி நெடுகசெல்வேன். (“என்னைக்குறித்தும் என் வார்த்தையைக் குறித்தும் வெட்கப்படுகின்றாயா?'') என்பதை நான் கேட்கிறேன். %என் இரட்சகர் அழைப்பதை நான் கேட்கிறேன் %உங்கள் இருதயங்களில் இதற்கு பதில் கூறுங்கள்; அவருடன் தோட்டத்தின் வழியே செல்வேன் %அவருடன் தோட்டத்தின் வழியே செல்வேன் %அவருடன் தோட்டத்தின் வழியே செல்வேன் %அவருடன் செல்வேன், வழி நெடுக செல்வேன். இப்பொழுது உங்கள் மரணப் படுக்கையில் நீங்கள் படுத்துக் கொண்டிருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். அப்பொழுது கால தாமதமாகியிருக்கும், இப்பொழுதல்ல. இப்பொழுது தலைவணங்கி, கரங்களையுயர்த்தி, ''அவருடன் நியாயத்தீர்ப்பின் வழியே செல்வேன்“ என்று பாடுங்கள். அது தான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. அவர் நம்மை நியாயந்தீர்க்கிறார். ஆண்டவரே, நான் குற்றவாளியென்று தீர்க்கிறீரா? அப்படியானால் என்னை மன்னியும். .... நியாயத்தீர்ப்பின்வழியே செல்வேன். ஆண்டவரே, இன்று காலை என்னை எவ்வாறு நியாயத்தீர்க்கிறீர்? ... நியாயத்தீர்ப்பின் வழியே செல்வேன். ஆண்டவரே, என்னை சோதித்துப் பாரும். அழுக்கான காரியம் என்னிடத்தில் உண்டோ என்று பாரும். அவருடன் செல்வேன். வழிநெடுக செல்வேன். 87 பிதாவே, இந்த கரங்கள் உயர்த்தப்பட்டதற்காக இன்று காலை உமக்கு நன்றி செலுத்துகிறோம். கையுயர்த்தாதவர் ஒருவரையும் நான் காணவில்லை, நீரும் காணவில்லையென்று நம்புகிறேன். ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறேன். கையுயர்த்தினவர் அனைவரும் உமது நியாயத்தீர்ப்பின் வழியே செல்ல ஆயத்தமாயுள்ளனர். ஆண்டவரே, எங்களை நியாயந்தீரும். எங்களில் தவறு ஏதாகிலும் காணப்பட்டால், பிதாவே, அதை மன்னிப்பீராக. உமது நியாயத்தீர்ப்பை சந்திக்க நாங்கள் விரும்பவில்லை. இப்பொழுது இரக்கம் உள்ளது. எனவே தேவனே, எங்களை நியாயந்தீர்த்து, உமது வார்த்தையின்படியும், உமது வாக்குத்தத்ததின்படியும் எங்கள் பாவங்களை மன்னிப்பீராக. எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கென்று வாழ்ந்து, சுவிசேஷத்தைக் குறித்து நாங்கள் வெட்கப்படாமல் இருப்போமாக. பிதாவே, உமக்கு சித்தமானால், மூன்று ஞாயிறு காலை தொடர்ச்சியாக கூட்டங்களை ஒழுங்கு செய்துள்ளோம். ஆண்டவரே, அதற்காக எங்கள் இருதயங்களை ஆயத்தம் செய்யும். ஓ, தேவனே, என்னை ஆயத்தம் செய்யும். நீர் எனக்கு அதிகமாக தேவையாயிருக்கிறீர். வரப்போகும் நாட்களில், நான் சொல்ல வேண்டிய, செய்யவேண்டிய காரியங்களில் என்னை வழிநடத்துவீராக. எங்கள் விலையேறப் பெற்ற சகோதரன் நெவிலை வழிநடத்துவீராக. ஆண்டவரே, அவர் உம்முடைய தீரமுள்ள ஊழியக்காரன். சகோ. மான் அவர்களையும், சபையின் டீக்கன்களையும், தர்மகர்த்தாக்களையும், இங்கு கூடியுள்ள ஒவ்வொருவரையும் வழி நடத்தும். 88 ஆண்டவரே, கிறிஸ்தவ முறையில் பாவிகளை உம்மிடம் கொண்டு வரவும்; நாங்கள் அறிந்துள்ள தேவனை சபையின் அங்கத்தினர்கள் அறிந்துகொள்ள, அவர்களை உம்மிடம் கொண்டு வரவும் எங்களை ஆயத்தப்படுத்தும். நாங்கள் தனிப்பட்ட விதத்தில் சந்தித்து அறிந்துள்ள அதே தேவன் அவர்களுடைய தேவனாகவும் ஆகட்டும். பிதாவே, அவர்களை உள்ளே அனுப்ப எங்களால் ஆகாது. ஆனால் பரிசுத்த ஆவியாகிய நீர் தாமே இந்த ஜனங்களின் மேலும் சபை அங்கத்தினர்களின் மேலும் அசைவாடுவீராக! அன்று காலை உம்மிடம் எனக்கு நேர்ந்த அனுபவம்: “என் மகனுக்கு ஒரு மணவாட்டியைக் கொண்டு வா. ஜனங்களின் மத்தியிலிருந்து, சபைகளின் மத்தியிலிருந்து, மணவாட்டியை வெளியே இழு” என்று கூறினர். ஆண்டவரே, உம்மிடம் வேண்டிக்கொள்கிறேன், நீர் ரெபேக்காளை அனுப்பும், நான் எலியேசரை போல் இருக்க முயல்கிறேன். உமக்கு விசுவாசமுள்ள ஊழியக்காரனாய் நான் இருக்க உதவிபுரியும். பரலோகத்தின் தேவன் தாமே தமது தூரதனை எனக்கு முன்பாக- எங்களுக்கு முன்பாக அனுப்புவாராக! அப்பொழுது நாங்கள் எல்லாவற்றையும் ஒன்று கூட்டி, நீர் தெரிந்துகொண்ட மணவாட்டியை நாங்கள் தேர்ந்தெடுப்போம். இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 89 சற்று நேரம் கழித்து உங்களை இங்கு வைத்திருந்ததற்காக வருந்துகிறேன். இருபத்தைந்து நிமிடம் தாமதமாகிவிட்டது, நான் இருபத்தைந்து நிமிடங்களுக்கு முன்பே இங்கிருந்து சென்றிருக்க வேண்டும். உங்களுக்கு அந்த பழைய பாடல், “இயேசுவின் நாமத்தைஉன்னுடன் கொண்டு செல்” பிரியமா? (சபையோர், 'ஆமென்' என்கின்றனர்- ஆசி). அது மிகவும் அழகான பாடல் அல்லவா? கூட்டத்தை முடிக்க முப்பத்தி மூன்று ஆண்டுகளாக இப்பாடலைப்பாடி வருகிறேன்; தண்ணீர் ஞானஸ்நானத்திற்கு, “யோர்தானின் புயலுக்கு கரைகளில் நான் நிற்கிறேன்'' என்னும் பாடல். அது மிகவும் அருமையான பாடல் என்பது என் கருத்து: ''நீர் எங்கு சென்றாலும் அதை கொண்டு செல்” %விலையுயர்ந்த நாமம், ஓ எவ்வளவு இனிமையானது! %பூலோகத்தின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்! (உங்கள் அடுத்துள்ளவர் கைகளை குலுக்குங்கள்) %விலையுயர்ந்த நாமம், (விலையுயர்ந்த நாமம்) ஓ எவ்வளவு இனிமையானது! %பூலோகத்தின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் இன்றிரவு ஆராதனையை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், இரவு ஏழரை மணிக்கு, ஒரே ஒரு சரணத்தை நாம் பாடுவோம்: %இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் %ஒவ்வொரு கண்ணிக்கும் கேடகமாக %உன்னை சுற்றிலும் சோதனைகள் சூழும்போது (நீ என்ன செய்வாய்) %அந்த பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரி. விலையுயர்ந்த நாமம், ஒ எவ்வளவு இனிமையானது! பூலோகத்தின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம். %விலையுயர்ந்த நாமம், ஓ எவ்வளவு இனிமையானது! %பூலோகத்தின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம். 90 ஆராதனைக்குப் பிறகு ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று யாராகிலும் இங்கு வந்துள்ளனரா? கையுயர்த்துங்கள், இரண்டு பேர், சரி. ஆராதனை முடிந்தவுடன் மற்றவர்கள் யாராகிலும் ஞானஸ்நானம் பெறவிரும்பினால், ஒவ்வொரு ஆராதனைக்குப் பிறகும் நாங்கள் ஞானஸ்நான ஆராதனையை நடத்துவோம். நீங்கள் செய்யவேண்டிய ஒன்றே ஒன்று, எங்களிடம் கேட்க வேண்டியது. உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க நாங்கள் ஆயத்தமாயுள்ளோம். அது எங்கள் கடமை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தல். அப்படி செய்வது எங்கள் கடமை. எந்த நேரமும் அதை செய்ய எங்களுக்கு பிரியம். ஞானஸ்நானம் பெறவேண்டிய நீங்கள் ஆராதனை முடிந்தவுடன் அந்த அறைகளுக்குள் செல்லுங்கள். அவர்களுடன் ஞானஸ்நானம் பெற வேறுயாராகிலும் விரும்பினால், அதற்காக நாங்கள் இங்கிருக்கிறோம், நீங்கள் உங்கள் பாவங்களுக்காக மனந்திரும்பி, இயேசுவை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டிருந்தால். நீங்கள் அநேகஆண்டுகள் கிறிஸ்தவர்களாக இருந்தும் கூட, வெளிச்சத்தை நீங்கள் காணவில்லை. விடுவிக்கும் வெளிச்சம் இப்பொழுது வந்துள்ளது. மணவாட்டி அந்த நாமத்தைத் தரித்துக் கொள்ள வேண்டும். இயேசு, “நான் என் பிதாவின் நாமத்தில் வந்திருந்தும், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. வேறொருவன் தன் சொந்த நாமத்தில் வருவான், அவனை ஏற்றுக் கொள்வீர்கள்'' என்றார். அதுதான் உங்கள் ஸ்தாபனம். எந்த ஒரு மகனும் தன் தந்தையின் நாமத்தில் வருகிறான். நான் என் தந்தையின் நாமத்தில் வந்திருக்கிறேன். நீங்களும் உங்கள் தந்தையின் நாமத்தில் வந்திருக்கிறீர்கள். அவருடைய நாமம் என்ன? அவருடைய பிதாவின் நாமம் என்ன? இயேசு அவர், ”நான் என் பிதாவின் நாமத்தில் வந்திருந்தும், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை'' என்றார். அவருடைய மணவாட்டி அவருடைய நாமத்தை நிச்சயம் பெற்றிருப்பாள். நான் ப்ராய் என்னும் பெயர் கொண்ட ஸ்திரீயை மனைவியாகக் கொண்டேன். அவள் பிரன்ஹாமாக மாறினாள். அவர் மணவாட்டிக்காக வருகிறார். நீங்கள் குளத்தண்டை வரும்போது, அதை நினைவில் கொள்ளுங்கள். இப்பொழுது நாம் தலைவணங்குவோம். 91 இங்குள்ள சகோ. வேயில் நமக்கு அந்நியர் அல்ல. அவர் மிகவும் விலையேறப்பெற்ற சகோதரர், அவரும் அவருடைய மனைவியும் என்னுடன் அநேக கூட்டங்களில் பங்குகொண்டுள்ளனர். இந்த பிரசங்கங்களை அவர் தான் புத்தக வடிவில் எழுதிக்கொண்டிருக்கிறார். சகோ. வேயில், நாங்கள் தலை வணங்கியிருக்கும் போது, ஜெபம் செய்து கூட்டத்தை முடிப்பீர்களா? 92 (சகோ. வேயில் ஜெபம் செய்கிறார்-ஆசி).